இனப் பிரச்சினையின் தீர்வில் சந்தர்ப்பவாதம் வேண்டாம்
நாட்டின் பிரதான பிரச்சினை களைப் பொறுத்த வரையில் முன்னணி அரசியல் கட்சி கள் தெளிவான நிலைப்பாட் டைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
இன்று நாடு எதிர்நோக்கும் பிரதான பிரச்சி னைகளுள் தேசிய இனப்பிரச்சினையும் அண் மைய இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்து வதும் பிரதானமானவை.
இனப் பிரச்சினைக் கான தீர்வைப் பொறுத்தவரையில் சகல அர சியல் கட்சிகளும் தெளிவான நிலைப்பா ட்டைக் கொண்டிருக்க வேண்டுமெனினும் மற் றைய கட்சிகளிலும் பார்க்கப் பிரச்சினையின் தீர்வுடன் நேரடியான சம்பந்தம் கொண்டுள்ள கட்சிகள் ஈடாட்டமின்றித் திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். அரசாங்கம், பிரதான எதிர்க்கட்சி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என் பனவற்றைப் பிரச்சினையின் தீர்வுடன் நேரடி யான சம்பந்தம் கொண்டுள்ள கட்சிகள் என வகைப்படுத்தலாம்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்போதும் ஜனாதிபதியினாலேயே வெளியிடப்படுகின் றது. பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடி யாக நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனா திபதி பல சந்தர்ப்பங்களில் தெளிவாகக் கூறியு ள்ளார். சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அதுவும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதும் அரசாங்க தரப்பி னால் வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அண் மைக் காலம் வரை தனிநாட்டுக் கொள்கையு டன் செயற்பட்டது. இக் கூட்டமைப்பின் தலை வர்கள் இப்போது வெளியிடும் கருத்துகளைப் பார்க்கும் போது, தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டு ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பது போல் தெரிகின்றது. எனினும் அரசியல் தீர்வுக் கான நகர்வுகள் எதையும் இதுவரை மேற் கொண்டதாகத் தெரியவில்லை. அரசியல் தீர் வுத் திட்டமொன்றைத் தயாரித்து வெளியிடப் போவதாகக் கூறுகின்றார்கள். அந்தத் தீர்வுத் திட்டம் விரைவில் மக்களின் பார்வைக்கு வருமென நம்புகின்றோம்.
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை யில் அப்பட்டமான சந்தர்ப்பவாதக் கட்சியா கவே செயற்படுகின்றது.
இனப் பிரச்சினைக் கான தீர்வுத் திட்டமெதுவும் இக்கட்சியிடம் இல்லை. இன்றுவரை தீர்வு பற்றிய நிலைப் பாடெதையும் ஐக்கிய தேசியக் கட்சி முன் வைக்கவில்லை. அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்வு முயற்சிகளில் பங்கேற்காது ஒதுங்கியிரு க்கின்றது- தீர்வுக்கான கட்சியின் ஆலோசனை களை இதுவரை சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பவில்லை. ஆனால் அரசாங்க த்தை விமர்சிப்பதற்காகவும் சில சந்தர்ப்பங்க ளில் அரசியல் லாபம் பெறுவதற்காகவும் இனப் பிரச்சினை பற்றிப் பேசுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழக்கமாகிவிட்டது.
இப்போது யாழ்ப் பாணத்திலும் வவுனியாவிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் இனப் பிரச்சினை பற்றி அடிக்கடி பேசுகின்றார்கள்.
அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள் வதற்காகத் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசி யல் தீர்வை வழங்காது அரசாங்கம் இழுத் தடித்து வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக ஊடகவியலாளர் மகாநாடொன்றில் கூறியிருக்கின்றார்.
அரசாங்கம் மேற்கொள் ளும் தீர்வு முயற்சிக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்காமல் ஒதுங்கி இருந்துகொண்டு விமர் சிக்கின்றார்கள்.
ஊடகவியலாளர் மகாநாடுகளில் தெரிவிக்கும் கருத்துகள் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு உத வப் போவதில்லை. உரிய இடத்தில் உரிய வகை யில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். அண் மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலை வர்கள் தத்தமது கருத்துகளைத் தெரிவித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி கள் மாத்திரம் எதுவும் கூறாது மெளனம் சாதி த்தார்கள்.
இனப்பிரச்சினையின் தீர்வில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்மையாகவே அக்கறை உண்டெ ன்றால் அரசாங்கத்தின் தீர்வு முயற்சிக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் முரண்பாடு இருக்குமேயா னால், ஐக்கிய தேசியக் கட்சி அதன் மாற்றுத் தீர்வுத்திட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஊடகவியலாளர் மகாநாடுகளிலும் பிரசார மேடைகளிலும் மாத்திரம் பேசுவது மக்களை ஏமாற்றும் முயற்சி. அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment