புலிகளின் தலைவராக பத்மநாதனின் நியமனம் முக்கியமற்றதொரு விடயம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை தொடர்ந்தும் ஓர் வலுவான இயக்கமாக கருதப்பட முடியாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செல்வராசா பத்மநாதன் நியமிக்கப்பட்டதாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் பாரியளவு நிதி ஒதுக்கங்களை கையாடும் நோக்கிலேயே பத்மநாதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் பத்மநாதனை தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரும் என கருதப்பட முடியாது என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் விடுதலைப் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடிய சாத்தியங்கள் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment