புலிகளின் இணையத்தளங்களுக்கு `தரவேற்றம்` செய்த நபர் கைது
புலிகளின் இணையத்தளங்களுக்கு தகவல்களை `தரவேற்றம்` செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கொழும்பு பொலிஸ் அறிவித்துள்ளது. புலிகளின் இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிட்டு வந்த பொறியியலாளர் ஒருவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான இவர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து, புலிகளின் இணையத் தளங்களுக்கு தகவல்களை தரவேற்றம் செய்து வந்துள்ளார். புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment