அனைத்து தமிழ்கட்சிகளும் ஜனாதிபதியுடன் இணையவேண்டும்- விநாயகமூர்த்தி முரளிதரன்!
அனைத்து தமிழ்கட்சிகளும் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டு அவரது கரத்தை பலப்படுத்த வேண்டும் என தமிழீழ விடுதலை புலிகளின் முன்னைநாள் கிழக்கு பிராந்திய தளபதியும் தற்போதைய தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கோரியுள்ளார்.
இன்றையதினம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே அதிகாரங்களை பெறமுடியும் என்றும், அனைத்து தமிழ்கட்சிகளும் அவரது கரத்தை பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment