மருத்துவ சான்றிதள் கொடுத்துவிட்டு மறைமுகமாக வாழும் மந்திரிகளை கண்டீரோ மாமா?
மரநிழலில் வாடி வதங்கும்
மக்களின் உரிமை ஓட்டில்
மலர்ச்சிபெற்று உயர்சியடைந்த
மன்னவர்களை கண்டீரோ மாமா?
மனைவியின் கால்களுக்கு
மருதாணி பூசி மகிழ்ந்தாடும்
மக்கள் தொண்டரை கண்டீரோ மாமா?
மகள் மருமக்கள் அனைவரையும் இலங்கை
மண்டலத்திற்க்கு வெளியே அனுப்பிவிட்டு
மல்லாக்கா படுத்துறஙகும்
மகாபாவிகளை கண்டீரோ மாமா?
மக்களை மந்தைகள் என நினைத்து
மாற்றி மாற்றி திசைகள் கூறீ
மரக்கம்புகளால் தழும்புகள் தந்த
மனிதர்களை கண்டீரோ மாமா?
மக்களுக்காகவே நாம் என்றும்
மண்ணை நேசிக்கின்றோம் என்று கூறிய
மண்புமிகு தோழர்களை அன்று
மறைத்தவர்களை மரப்பொந்துக்குள்ளே
மரம்கொத்தி பறவைகளாக கண்டீரோ மாமா?
மலர்ந்திடும் தமிழீழம் என்று கூறி
மாமனிதர்களை முட்டாளாக்கி
மயக்கம் தரும் மதுவருந்தி உல்லாசம் தேடும்
மானுடன்களை கண்டீரோ மாமா?
மண்ணுக்குள் ஆயிரம் ஆயிரம்
மறவர்களை புதைத்துவிட்டு
மனையாள் மகளுடன் லண்டன் நோர்வேயில்
மாடிவீடுகளில் வசிக்கும் வஞ்சகர்கனை கண்டீரோ மாமா?
என்றென்றும் அன்புடன் வவீதரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment