டுபாயில் இந்தியரைக் கடத்தி கப்பம் கோரிய குற்றச்சாட்டில் இலங்கையர் உட்பட மூவர் கைது
ஐக்கிய அரபு இராச்சியம் வாழ் இந்தியர் ஒருவரைக் கடத்தி தடுத்துவைத்து பெருந்தொகைப் பணத்தைக் கப்பமாகக் கோரிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பயணி ஒருவருக்கும், இந்தியப் பிரஜைகள் இருவருக்கும் எதிராக டுபாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தியப் பிரஜைகள் இருவரில் ஒருவர் சுத்திகரிப்புப் பணியாளர் என்றும், மற்றையவர் வேலையற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர் உள்ளிட்ட மூவரும், ஒப்பந்த நிறுவனமொன்றில் பணிபுரியும் இந்தியர் ஒருவரைக் கடத்தி தடுத்துவைத்து 1,39,000 திர்ஹாம் மற்றும் 1,28,000 திர்ஹாம் தொகையிலான காசோலைகளைக் கோரியுள்ளனர்.
இதேநேரம், மனுதாரரினால் தருவதாகத் தெரிவிக்கப்பட்ட 1,39,000 திர்ஹாம் பணம் உட்பட நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டிய சம்பளக் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதே இந்தக் கடத்தலின் நோக்கமென மூவர் கொண்ட அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், மனுதாரர் கடத்தி தடுத்துவைக்கப்பட்டிருந்த போது பெறப்பட்ட 1,39,000 திர்ஹாம் மற்றும் 1,28,000 திர்ஹாம் பெறுமதிகளிலான காசோலைகளை அவருடன் சென்றே பணமாக்க முயற்சித்த போதும் வங்கியில் பணமில்லாததால் அந்தக் காசோலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, யாரிடமும் உதவி கேட்க முயற்சித்தால் தன்னையும், இந்தியாவிலிருக்கும் தனது குடும்பத்தையும் கொன்று விடுவதாக மூவரும் கத்தியைக் காட்டி அச்சுறுத்தியதாக மனுதாரர் தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறிருப்பினும் இறுதியாகக் கடத்தப்பட்டு மூன்றாவது நாள் இரவு சிவில் உடையில் வந்த பொலிஸாரால் மனுதாரர் மீட்கப்பட்டிருக்கிறார்.
இதேநேரம், 1,20,000 திர்ஹாம் பணத் தொகையைக் கப்பமாகக் கோருவதே மேற்குறித்த மூவர் கொண்ட அணியினரின் திட்டமாக இருந்ததாக மனுதாரரின் மகன் தெரிவித்திருக்கிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment