தென்பகுதியில் வான்புலிகள் நடத்திய தாக்குதல்கள் அனைத்தையும் இந்திரா கதூவீகள் படப்பிடிப்பு
நான்காவது ஈழப்போரின் போது தென்பகுதியில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது வான்புலிகள் நடத்திய அனைத்து தாக்குதல்களையம் இந்தியா வழங்கிய இந்திரா கதூவீகள் படம் பிடித்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளின் வானூர்திகள் தாக்குதல்களை நடத்தி விட்டு பாதுகாப்பான முறையில் தப்பிச் சென்றமையினால் அதற்கு இந்திரா கதூவீகளின் குறைபாடுகளே காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் இதற்கு அந்த கதூவீகளின் குறைபாடுகள் காரணம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா வழங்கியிருந்த கதூவீகள் இரட்டை பரிணாமத்தை உடையவை ஆனால் இலங்கை முப்பரிமாண கதூவகளையே விரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவிடம் இருந்து இரண்டு கதூவிகளை பெற்றுக் கொள்ள இலங்கை அரசு முற்பட்ட போதிலும் ஒரு கதூவி மட்டுமே சீனாவிடமிருந்து கிடைத்திருந்தது அது மீரிகமவில் பொருத்தப்பட்டது. இருந்த போதிலும் வான்புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது இந்தியா வழங்கிய இந்திரா கதுவீகளே பயன்படுத்தப்பட்டன.
தரையை அடிப்படையாகக் கொண்ட வான்பாதுகாப்பு பிரிவு தோல்வியடைந்தமைக்கு பிரதான காரணம் கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தமையாகும். விங்கமாண்டர் சேனக பெர்ணாண்டோ புள்ளேயும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நெருக்கடி நிலையை வெற்றி கொள்வதற்கு கட்டுநாயக்கவிலும் கரவலப்பிட்டியவிலும் இலங்கை வான்படை மேடைகளை அமைத்திருந்தது. கொழும்பை சூழவர முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைகள் மீது உயர்ந்த கட்டங்களில் வானூர்த்தி எதிர்ப்பு பீரங்கிகளும் பொருத்தப்பட்டிருந்தது. இலங்கை பாதுகாப்பு முறைமைகளை ஏமாற்றுவதற்காக விடுதலைப்புலிகள் பல தொழில்நுட்ப உபாயங்களை கையாண்டனர். மரங்களுக்கு மேலாக பறப்பதைக் கண்டுபிடிக்க முடியாதவாறும் அதற்கு அப்பால் தமது இலக்குகளை அணுகும் போது தமது சகல மின்விளக்குகளையும் அணைத்து விட்டு அவர்கள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment