யாழ். குடாவில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர் ஆர்வம்: தம்மிக்க பெரேரா
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதலீடுசெய்வதற்கு உள் நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட் டுகிறார்களென முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் துவதற்கும், உயர்ந்த கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அவர்கள் முன்வருகிறார்களெனவும் அவர் கூறினார்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இது தொடர்பான வேலைத் திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படவுள்ளன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இலட்சக் கணக்கான இலங் கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் இவர்கள் மத்தியில் மேற்படி முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுட்டிக் காட்டிய முதலீட்டுச் சபையின் தலைவர், “அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழு அடுத்த வாரம் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று புலம் பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து இதற் கான முன்னெடுப்புகளைத் தெளிவுபடுத்த வுள்ளது” என்றார்.
இலங்கை உயர் மட்டக்குழுவின் இந்தச் சந்திப்புகளின் போது, “யாழ்ப்பாணத்தை உங்களது இரண்டாவது வாழ் விடமாக்குங்கள்” என்ற தொனிப்பொருளைக் கொண்டு ஊக்குவிப்பு நடவடிக்கை கள் முன்னெடுக்கப்படுமெனவும் தம்மிக்க பெரேரா கூறி னார். யாழ். குடா நாட்டுக்கான முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு யாழ். குடாநாட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைத்தல், புதிய வீடமைப்புக்களை ஏற்படுத்துதலும் இதில் அடங்கும்.
அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய வகையில் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என கூறிய முதலீட்டுச் சபைத் தலைவர் பல்வேறு முதலீ ட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தனியார் பாடசாலைகள், மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மருத்துவ மனைகளை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை, வடக்கு, கிழக்கில் முதலீடு செய்பவர்க ளுக்கு நீண்டகால அடிப்படையில் வரிச்சலுகை வழங்கப் படவுள்ளதோடு, பல்வேறு சலுகைகளையும் வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
முதலீட்டுச் சபையின் மலேஷிய விஜயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முதலீட்டுச் சபைத் தலைவர் தம்மிக்க, அது மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. இந்த விஜயத்தின்போது இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன. ஒன்று அரசியல் மற்றது பொருளாதார விடயமாக இருந்தது என தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment