அவுஸ்திரேலியாவில் கால்களும் கைகளும் இல்லாமல் பிறந்தவர் கோல்ப் விளையாடுகிறார், நீத்துகிறார்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் நிக் வூஜிசிக். 26 வயதான இவர் இப்போது அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். இவர் பிறக்கும் போதே இவருக்கு கால் களும், கைகளும் இல்லாமல் தான் பிறந் தார்.
இருந்தாலும் அதைபற்றி கவலைப் படாமல் அவர் கால்பந்து, கோல்ப் ஆகிய விளையாட்டுக்களை விளையாடுகிறார். படகுப் பயணம் செய்கிறார், நீந்துகிறார்.
அவரது இடது பக்க இடுப்புக்கு கீழே ஒரு சதைத்துண்டு கால் போல இருக்கிறது. அது தான் அவர் பந்தை உதைக்க உதவுகிறது. இந்த காலை வைத்து தான் அவர் டைப் அடிக்கிறார். பேனா கொண்டு எழுதுகிறார்.
நான் தண்ணீரில் இறங்கியதும் என் உடல் மிதக்கும். ஏனெனில் என் உடலின் 80 சதவீத பாகம் நுரையீரல் தான். என் கால் போன்ற பாகம் துடுப்பாக தண் ணீரை தள்ளும் என்கிறார்.
இவர் 18 மாத குழந்தையாக இருந்த போதே இவர் தந்தை இவரை தண்ணீரில் தூக்கிபோட்டு விடுவார். நீச்சல் அடிக்க அவர் தான் கற்றுக் கொடுத்தார்.
இவருக்கு காதலிகளும் இருக்கிறார்கள். இருந்தாலும் திருமணம் ஆகும் வரை கன்னி கழியாமல் இருக்கவே விரும்பு கிறார்.
திருமணம் செய்து கொள்ளும்படி பெண் களும் கேட்டு வருகிறார்கள். ஆனால் சரியான பெண் கிடைக்கவேண்டும் என்று அவர் காத்து இருக்கிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment