பெண்கள் பர்தா விவகாரம்; அல்கொய்தா எச்சரிக்கை
பிரான்சு ஜனாதிபதி சார்கோசி கூறும்போது பிரான்சில் பெண்கள் பர்தா அணிய அனுமதிக்க மாட்டோம் பர்தா அணிவது பெண்களை அடிமைப்படுத்துவது போல் இருக்கிறது என்று கூறி இருந்தார்.
இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் வடக்கு ஆபிரிக்கா அல்கொய்தா அமைப்பு சார்பில் பிரான்சுக்கு எச்சரிக்கை விடுத்து இணைய தளத்தில் செய்திகள் வெளியிட்டு உள்ளனர்.
அதில் பிரான்சில் அரசு முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது இதில் இருந்து பிரான்சு மாற வேண்டும் இல்லை என்றால் இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.
அல்கொய்தா எச்சரிக்கையை அடுத்து பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்லும் பிரான்ஸ் நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment