ஜக்சனின் இரு பிள்ளைகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு முதல் மனைவி வழக்குத் தாக்கல்
மைக்கல் ஜக்சனின் இரு பிள்ளைகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் மனைவி டெபிரோ ரோவ் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளமை அப்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மைக்கல் ஜக்சனின் மரணத்தைத் தொடர்ந்து அவரது முன்னாள் மனைவியான டெபிரோ ரோவினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சட்ட நடவடிக்கை இதுவாகும்.
இதேவேளை, தனது மூன்று பிள்ளைகளையும் தனது தாயாரே நிரந்தரமாகப் பராமரிக்க வேண்டுமென உயிலில் குறிப்பிட்டுள்ளார் மைக்கல் ஜக்சன்.
மைக்கல் ஜக்சனுக்கும் டெபிரோ ரோவுக்கும் இடையிலான தொடர்பு தோற் சிகிச்சை மருத்துவமனையில் ஆரம்பித்து பின்னர் திருமணத்தில் நிறைவேறியது.
இதனைத் தொடர்ந்து இரு பிள்ளைகளுக்குத் தாயான ரோவ் சிறிது காலத்தின் பின் ஜக்சனிடமிருந்து விவ?கரத்துக்கோரி வழக்குத் தொடர்ந்து 8.5 மில்லியன் அமெரிக்க டொலரினை ஜீவனாம்சத் தொகையாகப் பெற்றுக் கொண்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
தனது பிள்ளைகளான மைக்கல் ஜோசப்புடனும் மைக்கல் கேத்ரினுடனும் சொற்ப காலத்தையே கழித்திருந்தார்.
இந்நிலையில், மைக்கல் ஜக்சனின் தாயாரிடம் தனது பிள்ளைகள் தொடர்ந்தும் வளர்வது குறித்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜக்சனின் இரு பிள்ளைகளையும் ஜக்சனின் தாயாரிடம் ஒப்படைப்பதா மனைவியிடம் ஒப்படைப்பதா என்ற விசாரணைகள் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment