மைக்கேல் ஜக்சனின் பெயரில் மின்னஞ்சலில் பரவும் வைரஸ்
மைக்கேல் ஜக்சனின் பெயரைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜக்சன் என்ற பெயரில் ஈமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மின்னஞ்சலில் ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.அதில் மைக்கேல் ஜக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மின்னஞ்சல் கூறுகிறது. அடடா என்று ஆச்சரியப்பட்டுத் திறந்து பார்த்தால் அவ்வளவுதான் கணினி காலியாகி விடுகிறதாம்.
இதனால் நமது கணினி மட்டுமல்லாது, யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம்.
அதேபோல, மைக்கேல் ஜக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment