புலிகளின் முக்கிய தளபதிகளான ராம் மற்றும் நகுலன் உள்ளிட்ட குழுவினரைக் கைதுசெய்ய விசேட பிரிவு
கிழக்கில் தலைமறைவாகியிருக்கும் புலிகளின் முக்கிய தளபதிகளான ராம் மற்றும் நகுலன் உள்ளிட்ட குழுவினரைக் கைதுசெய்ய விசேட படைப்பிரிவொன்றும் பொலீஸ் புலனாய்வுப் பிரிவொன்றும் ஈடுபட்டுள்ளதாக மொனறாகலை மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். மொனறாகலை காட்டுப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள ராம் தலைமையிலான குழுவினர், படையினரிடம் சரணடையும் நோக்குடன் கிழக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மொனறாகலை, புத்தளை பிரதேசங்களிலுள்ள எல்லைக் கிராமங்களில் நிலவிய புலிகளின் அச்சுறுத்தல் நீங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யால பிரதேசத்திற்கு உட்பட்ட 104கிலோமீற்றர் பரப்பிலுள்ள சுமார் 40கிராமங்களைச் சேர்ந்த 40ஆயிரம் பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மொனறாகலை மாவட்டத்திலுள்ள புலிகள் பிரச்சினை 90வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தப்பிச் சென்றுள்ள ராம் குழுவினர் தொப்பிக்கலை காட்டுப்பகுதியில் ஊடுருவியிருக்கலாமென ஒரு தகவலும், சரணடையும் நோக்கில் அக்கரைப்பற்றுக்கு சென்றிருக்கலாமென மற்றொரு தகவலும் தெரியவருகிறது என்று தெரிவித்த சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் கடந்த ஏப்ரல் 12ம் திகதி மாகொடயாய கிராமத்தில் 09பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய புலி உறுப்பினர் அக்கரைப்பற்றில் சரணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment