வெள்ளை சேட்டு அணிந்து வீடுவீடாய் தமிழரின் கதவினை தட்டியவீமர்களை பார்த்தீரோ தம்பி
தீர்க்க தரிசிகளை
தீயிட்டு கொழுத்தியவர்கள்
திக்குத் தெரியாத
திசைக்கு திசைமாறி போனதைஅறிவீரோ தம்பி
தீமைகளை சுமந்த மனம்
தீபோல் எரிந்து கருகிப்போனதை பார்த்தீரோ தம்பி
திறமைகளை தெரிந்தெடுத்து
திராவகத்தில் நனைத்து தீர்ப்பு வழங்கிய
தீவிரவாதி எங்கள் தீவுக்குள்ளே பாத்தீரோ தம்பி
திண்ணைபேச்சாளர்களின் வீண்பேச்சுக்கள
தீச்சட்டிக்குள் கருகிபோனதை அறிவீரோ தம்பி
வெள்ளை சேட்டு அணிந்து வீடுவீடாய்
வெளிநாடுகளில் தமிழரின் கதவினை தட்டிய
வேதாரிகளை அறிவீரோ தம்பி
வேப்பம்பழத்தில் இனிப்பைத் தேடி
வேகத்தை அதிகரித்து வீத பணத்திற்கு
வெட்க்கமில்லாமல் மக்களிடம்
வேட்கை ஏதும் நெஞ்சில் இல்லாமல் வசூல்
வேட்டைக்கு புறப்பட்ட கண்டால் சொல்வீரோ தம்பி
தமிழீழம் வாங்கித் தருவோம் என்று
தவித்து உழைத்திடும் மக்களிடம்
தரங்கெட்ட வார்த்தைகளை
தாரைவார்த்து சுரண்டிப்பிழைத்தவரை
தரைமீது துயிலுபவரை கண்டீரோ தம்பி
கள்ள கையெழுத்து போட்டு
கணணி மூலமாக கடன் பெற்று
களவாணிகள் காசோலைகளாக மாற்றி
காதலியின் பெயரில் கணக்கிட்டதை
காதோரம் சொல்வீரோ தம்பி
கொள்கை தவறிபோனதால்
கோயினில் பக்தர்களின் பணத்தை
கோடிகோடியாய் கொள்ளையடித்து
கொழும்பில் மாளிகை வாங்கியதை
கொலுதனில் ஏறிநின்று உரைப்பீரோ தம்பி
தமிழரின் தாகம் தமிழீழம்மென்று
தவித்திடும் மக்களிடம் முட்டை கண்ணீர் விட்டு
தரணியில் நீச்சல் தொட்டியில் நிச்சல் போட்ட
தன்னலச் சுயநலவாதிகளை நீச்சல்
தடாகத்தினில் கண்டீரோ தம்பி
என்றென்றும் அன்புடன்
வவீதரன்
மஹாவலி.கொம் தம்பி
0 விமர்சனங்கள்:
Post a Comment