வன்னித்தம்பியும் பொன்னிமாமியும்
மருமோன் வன்னித்தம்பிக்கு பொன்னிமாமி துடக்குக் கழிப்பு
நான் வளத்த ராசா கனவு மாதிரி எல்லாம் நடந்து முடிஞ்சுதடா
உனக்கு அந்திரட்டி செய்தது நான் மட்டும்தானடா நான் வளத்த ராசா
பாடையிலை போவார் உன்னை ஆமி போட்டிட்டிது எண்டு வடிவாத்
தெரிஞ்சும் நீ இன்னும் உயிரோடை இருக்கிறாய் எண்டு சொல்லிக்
கொண்டு திரியிறாங்களடா.
நீ உயிரோடை இருக்கேக்கையும் உன்ரை பேரைச் சொல்லி
சொத்துப்பத்து சேத்தவங்கள் நீ செத்தபிறகும் உனக்கு அஞ்சலி
செய்யாமல் காசு சேத்துக்கொண்டு திரியிறாங்களடா.
உனக்குப் பிள்ளையள் இருந்தும் கொள்ளி வைக்கிறதுக்கு
ஒருத்தரும் இல்லாமல் போட்டாங்களடா!
எத்தனை பேருக்கு சமாதி கட்டி விட்டனீ.
உனக்கு மட்டும் ஒரு அரை அங்குல நிலம் கூடி இல்லாமல்
போட்டுதே.
உன்ரை பிரேதத்தை ஆமிக்காரனே எரிச்சுக் கரைச்சுப் போட்டானாம்.
உன்ரை சாம்பலைக்கூட வாங்க ஒருத்தரும் வரேல்லையடா.
சாம்பலை வாங்கி என்னட்டையாவது தந்திருந்தா நான் கீரிமலைக்
கடலிலை கரைச்சு வரிசம் வரிசம் ஆடி அமாவாசையிலை பூசை
வச்சிருப்பனல்லோ நான் வளத்த ராசா!
உந்தப் பெரிய இந்தியனாமிக்கே தண்ணி காட்டினனீ.
முல்லைத்தீவிலை உந்தப்பெரிய சுனாமியிட்டையும் தப்பினனீ.
ஆனா உந்தச் சிலோனாமியிட்டை மட்டும் தப்பேலாமல் போனியே
நான் தூக்கி வளத்த ராசா!
நாடு அமைதியா இருக்கக் கூடாது அடிக்கடி வெடிச்சத்தம்
கேட்டுக்கொண்டு இருக்கவேணும் மாமி எண்டு நெடுகச் சொல்லிறனீ.
வெடிச்சத்தம் நிண்டால் சனம் உன்னை மறந்திடும் எண்டும்
சொல்லிறனீ!
துரையப்பாவை போட்டுத் தள்ளினாய் வெடிச்சத்தத்தம் கேக்கத்
துவங்கினது. உன்னைப் போட்டாங்கள் வெடிச்சத்தம் நிண்டிட்டுது.
ஆனா உன்னைப் போட்டுத் தள்ளியாச்செண்டு எண்டு பட்டாசு
வெடிச்சத்தம் மட்டும்தான் கேக்குது.
எல்லாரும் தீபாவளி கொண்டாடிறாங்களடா! நான் வளத்த ராசா
எத்தினை பேருக்கு நெத்தியிலை பொட்டு வச்சாய்.
பார் உன்ரை நெத்தி என்ன கோலத்திலை கிடக்கு
உனக்கு நெத்தியிலை பட்டையும் வச்சு
நாமமும் போட்டு விட்டிட்டாங்களடா நான் வளத்த ராசா
மக்களெல்லாம் உன்ரை பக்கம் எண்டு உவன் புதுவை தட்டினதுரை
பாடினவன். பாடினவனும் கடைசி நேரத்திலை உன்னை விட்டிட்டு
வவுனியாவுக்கு ஓடிவிட்டான்.
நீ கோமணத்தோடை செத்துப்போய்க் கிடக்கேக்கை
எந்த நாயடா உன்ரை பக்கத்திலை நிண்டது.
எல்லாரும் சிங்களம்தான் கதியெண்டு வவுனியாப் பக்கமாவல்லே
ஓடியிட்டாங்கள்.
சிங்களத்தை ஒருக்காலும் நம்பக்கூடாது எண்டு அடிக்கடி
சொல்லிறனீ. ஆனா உன்ரை கொப்பனும் கோத்தையுமே
சிங்களத்தை நம்பி வவுனியாவுக்கு ஓடேக்கை மற்றவன் ஏனடா
நிக்கப் போறான்.
எத்தினை தரம் சொன்னனான் சிங்களவன் தாறதை
வாங்கிக்கொண்டு பிரச்சனையைத் தீரடா எண்டு
கேட்டியே! சாகிறன் பந்தயம் பிடி எண்டு நிண்டனீ.
சிங்களம் தாறது சனத்துக்கல்லோ
எனக்கென்னத்தை தரப்போறான் எண்டனீ!
இப்ப உனக்கே அந்திரட்டி செய்ய வச்சிட்டாய்
நான் தூக்கி வளத்த ராசா!
நீ செத்தபிறகு உன்ரை தலையை தோண்டிப் பாத்தவங்களடா!
உள்ளுக்கை ஒண்டும் இல்லையாம்.
நீ உயிரோடை இருக்கைக்குள்ளை மட்டும் உன்ரை தலைக்குள்ளை
ஏதும் இருந்ததே
எனக்கு வயிறு பத்தி எரியுதடா நான் தூக்கி வளத்த ராசா!
மின் அஞ்சலில் கிடைக்கப்பெற்றது
0 விமர்சனங்கள்:
Post a Comment