ஒரு கரும்புலியின் கதை
பொது மக்களுக்கு பெரிய நாசத்தை ஏற்படுத்தும் புலிகளால் அடிக்கடி பயன்
படுத்தப்படும் அச்சத்தை ஏற்படுத்தும் ஆயுதமான தானாக தனது தவறுகளை
ஒப்புக்கொண்ட மனித வெடிகுண்டு கரும்புலியுடன் நேருக்கு நேராக அமர்ந்
திருக்கின்றேன். அவன் தன்னை வெடிக்கவைக்கும் தற்கொலை அங்கியை
அப்போது அணிந்திருக்கவில்லை என்பதால் எனக்கு ஆறுதலாக இருந்தது.
பயங்கரவாதிகளைக் கைது செய்தும் அவர்களின் தடயங்களை ஆராயும்
பாதுகாப்பு அமைச்சின் அதி உயர் பாதுகாப்பு வலய்ப் பிரதேசம் அதுவாகும்.
பாதுகாப்பு சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் விசாரணைகள்
நடைபெறுவதால் அவர் யார் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த வந்தார்,
எப்போது தாக்குதல் நடத்த வந்தார், என்பது பற்றிய விபரங்களை பகிரங்கப்
படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
நான் முதலில் அவனுடைய சைகைகள் முகபாவனைகளை அறிந்து கொண்
டேன். அவனது கண்களை உற்றுநோக்கிஅ வன் என்னிடம் பொய் சொல்
லமாட்டான் என்பதையும் உறுதிசெய்து கொண்டேன். குட்டையாக தலைமுடி
வெட்டப்பட்ட, முகச்சவரம் செய்யப்பட்ட, பழுப்பு நிறமான தோற்றம் கொண்ட
அப்பாவி போலக் காணப்பட்டான் அந்த 26 வயது மதிக்கத்தக்க
இளைஞன். முதலில் அவனைப் பார்ப்பவர்கள் அவனை ஒரு மனித
வெடிகுண்டு என்று கருதிக்கொள்ள மாட்டார்கள். அவனை மிகவும் உற்று
நோக்கியபோது அவனது முழங்கையில் உள்ள கீறல் அடையாளங்களும்
தழும்புகளும் அவன் கடுமையான யுத்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது
தெரிகிறது. அவன் என்னுடன் ஒத்துழைப்பதற்காகவும், அவன் தற்கொலைக்
குண்டுதரியாக முன்பும் தற்கொலைக் குண்டுதாரியான பின்புமான வாழ்க்கை
வரலாறுகளை அவன் என்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், அவனுக்கு
நல்ல உணவு வகைகளைப் பெற்றுக்கொடுத்தும் என்னால் முடிந்தவரை நன்
மதிப்புடன் நடந்துகொண்டேன். ஏன்னுடைய நோக்கம் முழுவதும் அவன் ஏன்
எப்படி மனித வெடிகுண்டாக ஆனான் என்பதை ஆராய்வதாக இருந்தது.
நேரத்திற்கு நேரம் இரண்டு வாரமாக அவனிடம் விஜயம் செய்தேன். நாங்
கள் அவனை ராஜதுரை கணேஸ் என்ற பெயரால் அழைக்கலாம். ஆனால்
அது அவனுடைய உண்மையான பெயரல்ல என்பது தெரிந்த விடயம். நம்பிக்
கையான ஒரு மொழி பெயர்ப்பாளர் மூலமாக அவனுடன் உரையாடினேன்.
தனக்கு நெய்த்தோசையும் சம்பலும் மிகவும் பிடித்த உணவு என்று கணேஸ்
கூறினான். ஒரு தடைவ அவனிடம் விஜயம் செய்தபோது அதிகாரிகளின்
அனுமதியுடன் அவருக்கு சைனீஸ் பிரைட் றைஸ் கொண்டுபோய்க் கொடுத்
தேன். அவன் அது என்னவென்று கேட்டான். முதலில் சாப்பிடு சாப்பிட்
டபிறகு சந்திப்போம் என்று சொன்னேன். அவன் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு
மிகவும் ருசியாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறினான்.
அதன் பிறகு ஐஸ்கிறீமும் வழங்கப்பட்டது. ஐஸ்கிறீமைச் சாப்பிட்டவன்;
ஐஸ்கிறீம் மிகவும் சுவையாக இருந்ததென்றும் தான் புதுக்குடியிருப்பில்
இருந்த காலத்தில் தான் ஐஸ்கிறீம் சாப்பிடவில்லையென்றும் சொன்னான்.
அவனைச் சௌகரியமாக ஆக்கியபின் அதி பயங்கர ஆயுதமான கரும்புலி
தற்கொலை உறுப்பினரின் இரகசியங்களை கூறத் தொடங்கினான் அந்த
இளைஞன்.
நான் இப்பொழுது அவனுடைய சரிதத்தை எழுதும் முதல் ஆளாக இருப்
பதால் அவனை தரக்குறைவாக விபரிக்காமல் முக்கிய குறிப்பக்களை
எழுதுவதற்காக இடையிடையே கேள்விகளையும் கேட்டு அவனது சரிதத்தை
எழுதுகின்றேன்.
ராஜதுரை கணேஸ் தனது சரிதத்தை விரிக்கிறார்.
நான் உலகத்தைப் பார்த்த நாளிலிருந்து நான் விளங்கிக்கொண்டது,
சிங்களவர் யார் என்று எனக்கு தெரியாது. சிங்கள இராணுவம் யார் என்றும்
எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தது மட்டும் புலி உறுப்பினர்கள்
ஹீரோக்கள் போல ஆயுதங்களை காவித் திரிந்தது மட்டும்தான். எனக்குப்
பதினாறு வயதாயிருக்கும்போது புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன்
திரிவதை தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருந்தேன். அனால் என்
னுடைய நடவடிக்கைகளை அவதானித்த என்னுடைய தாயார் என்னைத்
திசைதிருப்பி கல்வியில் அக்கறை செலுத்தும்படி என்னை வற்புறுத்தினார்.
எனக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் இருக்கிறார்கள். நான்
குடும்பத்தில் மூத்தவன் என்கிறபடியால் எனது சகோதரர்களை மிகவும்
நேசித்தேன்.
ஒருநாள் நான் புதுக்குடியிருப்பிலுள்ள சங்கக்கடைக்கு உணவுப் பொருட்
களைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது புலிகள் என்னைப் பலாத்காரமாக
பிடித்துச் சென்று சிறுவர் படையணியில் இணைத்து கட்டாயப் பயிற்சியில்
ஈடுபடுத்தினர். அதனால்தான் நான் சிறுவர் போராளியானேன். கிட்டத்தட்ட
இரண்டு வருடங்களின் பின் என்னுடைய வீட்டுக்குச் சென்றுவர புலிகள்
என்னை அனுமதித்தார்கள். நான் வீட்டிற்குச் சென்றபோது சகோதரிகளும்,
சகோதரனும் கல்வியைத் தொடரும்படி வற்புறுத்தினார்கள்.
கரும்புலியாக மாற நான் தீர்மானித்தேன்.
ஒருநாள் சங்கக்கடையில் பொருட்களைப் பெறுவதற்காக வரிசையில் நின்
றவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். அங்கு வயதான பெண்மணி
பொருட்களைப் பெறுவதற்காக வந்திருந்தார். அந்தப் பெண்மணியை முன்
னே செல்ல பொருட்களைப் பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர்கள்
முதலிடம் கொடுத்தார்கள். பொருட்களைப் பெற்றுக்கொண்ட இந்தப் பெண்
ணிடம் கடை உரிமையாளர் ஒரு சதம் கூட அறவிடாடதையும் நான்
அவதானித்தேன். மேலும் இருவர் அந்த வயதான பெண்மணி வாங்கிய
பொருட்களை சுமந்து சென்றனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்துவிட்டு யார்
இந்தப் பெண்மணி ஏன் இவருக்கு மட்டும் இவ்வளவு சலுகை என்று விசாரித்
தபொழுது அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி இறந்துபோன ஒரு கரும்
புலி ஒருவரின் தாயார் அதனால்தான் அவருக்கு இந்தச் சலுகை எனக்
கூறினார்கள்.
ஒரு குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் கரும்புலி உறுப்பினராக இணைந்து
கொண்டால், குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்தில்
இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். அதோடு மட்டுமல்ல அந்தக் குடும்பத்
தினர் மாவீரர் குடும்பமாக கௌரவிக்கப்பட்டு அந்தக் குடும்பத்தின் எல்லாத்
தேவையான எல்லாம் வழங்கப்படும் என்ற மனத்தோற்றத்தை புலிகள் ஏற்படுத்
தினார்கள். புலிகளின் இந்தச் செய்கை என் குடும்பத்தை பாதுகாக்க என்
னைத் தூண்டியது. எனது சகோதரர்களைப் புலிகள் இயக்கத்தில் சேர்க்
காமல் பாதுகாக்கவும் அதே நேரம் எனது குடும்பத்துக்கு மற்றவர்களிலும்
பார்க்க முன்னுரிமை கிடைக்கவும் ஒருநாள் என்னுடைய பிரிவுப் பொறுப்
பாளர் நாகேசிடம் நான் கரும்புலித்தற்கொலையாளியாக மாற விரும்பும்
எண்ணத்தைச் சொன்னேன். அதே நாள் நாகே~; என்னை விசுவமடுவிலுள்ள
விசேட அனுமதியின்றி யாரும் உள்நுழையமுடியாத அதி உயர் பாதுகாப்பு
வலயத்தினுள் என்னை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையினுள்
அடைக்கப்பட்டேன். நான் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது.. நான்
சிறையிலடைக்கப்பட்டதுபோலவே இருந்தேன். இடியப்பம். தோசை. இட்லி,
சோறு கறி என்று உணவு தந்தார்கள். ஒவ்வொரு நாள் காலையில் ஒரு
கிளாஸ் பால் குடிக்கத் தந்தார்கள். இத்தனை நடவடிக்கைகளிற்கும் ஒரு
பொறுப்பாளர் இருந்தார். என்னை பயிற்சிக்காக பொறுப்பாளர் அழைத்துச்
சென்றார். என் கண்கள் எப்போதும் கட்டப்பட்டிருக்கும். பிரசங்கம் செய்யும்
போதும்கூட எனது கண்கள் கட்டப்பட்டிருக்கும். அங்கு எழும் சத்தங்களை
வைத்து என்னைப்போல பலர் அங்கு பயிற்சி பெறுகிறார்கள் என்பதை
உணர்ந்து கொண்டேன்.
எமது குறிக்கோள்
எமது தற்கொலைத் தாக்குதலை நிறைவேற்றும் மனித
வெடிகுண்டின் ஒரு அங்கமாக எம்மை வழிநடுத்துபவரின்
புலனாய்வுத் தகவல்கள் எமது இலக்கிற்கு
முக்கியமானவை.
எம்மை இயக்குபவர் கொழும்பு நகரின் முக்கியமான
இடங்களுக்கு எம்மை அழைத்துச் செல்வார்.
இன்னொருவர் தற்கொலை அங்கிகளை வேறாக எடுத்துச்
செல்வார்.
தற்கொலைக் குண்டுதாரி தனது பகுதியை பாதுகாப்பான
முறையில் நிர்மாணித்ததும். அவன் அல்லது அவள்
தாக்குதலுக்கு தயாராவார்கள்.
இதேநேரம் புலிகளின் புலனாய்வாளர்கள் தாக்குதல்
இலக்கினுடைய தகவல்களை வெளிநாட்டிலுள்ள தொடர்
பாளரிடம் வழங்குவார். தற்கொலைக் குண்டுதாரி வெளிநாட்
டிலுள்ள தொடர்பாளரிடமிருந்து தாக்குதல் இலக்கு பற்றிய
தகவல்களைப் பெற்றுக்கொள்வார்.
இதுதான் புலிகளின் தற்கொலை வலைப்பின்னல்
நடவடிக்கை. இது பெற்றுக்கொள்ளப்பட்ட இரகசியத்தின்
ஒரு பகுதி மேலும் பல தகவல்கள் வெளியிடப்படும்;.
குருதி சிந்தாமல் தமிழீழம் இல்லை
ஓவ்வொருநாளும் பிரசங்கத்தில் பிரதானமான விடயம் அழுத்திச் சொல்லப்
படும். குருதி சிந்தாமல் ஈழம் கிடைக்காது என்பது முக்கியமாகச் சொல்லப்
படும். இந்தப் பிரசங்கத்தின்பேர்து யாரும் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட
மாட்டார்கள். அப்படி யாரும் கேள்வி கேட்டாலும்கூட ஒருபோதும் பதில்
கிடைக்காது. இரண்டு மாதங்களுக்கு இந்தப் பிரசங்கம் ஒவ்வொரு நாளும்
இருக்கும்.
என்னைச் சாப்பிட அழைத்துச் செல்லும்போது எனது கண்கள் கட்டப்பட்டிருக்
கும். என்னை அறையில் வைத்துப் பூட்டும்போது என்னுடைய ஒவ்வொரு
அசைவுகளையும் என்னைப் பராமரிப்பவர் அவதானிப்பதைக் கவனித்தேன்.
இரண்டு மாதங்களின்பின் என்னுடைய அறையில் nhதலைக்காட்சியும்
வீடியோவும் பொருத்தப்பட்டது. ஒரு இரவு நான் உறங்கிக் கொண்டிருக்கும்
போது என்னைப் பராமரிப்பவர் என்னை எழுப்பி தொலைக்காட்சியை ஆரம்பித்
தார். அதில் மக்கள் கூச்சலிடுவதையும், சிலர் இரத்த வெள்ளத்தில் கிடப்
பதையும் ,சிலரது உடல்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டேன். தொடர்ந்து
இரண்டு கிழமைகள் இந்தக் காட்சியை திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய
நிhப்பந்தம் ஏற்பட்டது. இந்த நடவடிக்கை இராணுவ நிலைகளுக்கும் முகாம்
களுக்கும் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் நடவடிக்கையாகும்.
அதன்பிறகு என்னை நடைமுறைப் பயிற்சிக்காக அனுப்பினார்கள். முதலில்
மற்றவர்கள் தற்கொலை அங்கிகள் தயாரிப்பதை அவதானித்தேன்.
தற்கொலை அங்கிக்கு நிகரான நிறையுடைய வெடி மருந்துகளற்ற
போலியான தற்கொலை அங்கியை அணியத்தந்தார்கள். அதை அணிந்
துகொண்டு நடந்தும். ஓடியும் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில்
பயிற்சி எடுத்துக் கொண்டேன். சயனைட் போல எனது கழுத்தில் தொங்கிக்
கொண்டிருக்கும் மரக்கட்டையை இடையிடையே கடிக்கவும் வேண்டும்.
போலியான தற்கொலை அங்கியை அணிந்து பயிற்சி பெற்ற பிறகு வெடிமருந்
துடன் கூடிய உண்மையான தற்கொலை அங்கியை அணியத் தந்தார்கள்.
அதை அணிந்துகொண்டு நடந்தும் ஓடியும் அவதானிக்கப்பட்டதன்படி
சந்தேகப்படும் நிலைக்கு அப்பால் உயர்த்தப்பட்டேன்.
அதன்பிறகு நகரும் வாகனத் தொடரணியை குறி வைப்பதற்கு பயிற்சி
எடுத்துக் கொண்டேன். கொழும்பிலிருந்து கிடைக்கப்றெ;ற புலிகளின் புலனாய்
வுத்துறையின் தகவலின்படி பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வாகனத்
தொடரணியை தாக்குவது போன்று போலியான ஒரு தாக்குதலை ஒத்திகைக்
காகத் தயார் செய்தார்கள். வெடிமருந்துக்குப் பதிலாக மை போன்ற சிவப்பு
நிறத்திராவகம் கொண்ட தற்கொலை அங்கியை அணியத் தந்தார்கள்.
பாதுகாப்புடன செல்லும் தொடரணியை நெருங்கிச் சென்று இலக்கை அடைந்
ததுதம் வெடிக்கவைக்கும் பொத்தானை அழுத்தவேண்டும். அந்தப் பொத்
தானை அழுத்தம்போது தற்கொலை அங்கி வெடித்து சிவப்பு மை பற்
ககும் போது நான் சரியான இலக்கை அடைந்திருக்கிறேனா என்பது உறுதி
செய்யப்படும். நான் சரியான இலக்கைத் தாக்கும்வரை எனக்கு
கடுமையான பயிற்சி
வழங்கப்பட்டது. பயிற்சி முடிவடைந்ததும் பொட்டம்மான் என்னை வந்து
சந்தித்து பிரசங்கம் செய்தார்.
இப்படி ராசதுரை கணேஸ் கூறிக்கொண்டிருந்தபோது நான்
குறுக்கிட்டு அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
கேள்வி::- நீ பொட்டு அம்மானை தனியாகச் சந்தித்தாயா?
பதில்:- ஆம். நூன் அவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசினேன்.
அவர் என்னிடம் சொன்னார், நீ புலிகளினுடைய சொத்து. நீ பிடிபட்
டதும் அவசரப்பட்டு சயனைட் குப்பியை கடிக்காதே! சயனைட் குப்
பியைப் பாதுகாப்பாக வைத்திரு. அல்லது இலக்கை அடையும்வரை
மலவாசலுக்குள் ஒளித்து வை. அவர்கள் உன்னைத் தடுத்து வைத்
திருந்தால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாதாடி நீ ஒரு அப்பாவி
முஸ்லிம் வர்த்தகர் என் நம்பச் செய். எவ்வளவு செலவானாலும்
உனது குறிக்கோளை நிறைவேற்று. அப்படி உன்னால் தப்பிக்க
முடியாது என்று நிச்சயமாகத் தெரிந்தால் சயனைட் குப்பியைக்
கடி. நான் இதெல்லாம் ஏன் சொல்லுகிறேனென்றால் நீ எமது
இயக்கத்திற்கு மிகவும் பெறுமதியானவன். நாம் உனக்கு இடப்பட்ட
குறிக்கோளை நிறைவேற்றும்வரை நீ உயிருடனிருக்கவேண்டும்.
(இதில் நான் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திமீது தற்கொலைக் குண்
டுதாரி வெடித்து அவரைக் கொலை செய்த நேரம் அங்கு இன்னும்
சில தற்கொலைக் குண்டுதாரிகள் அங்கிருந்திருக்கிறார்கள். நளினி
மற்றும் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள். நான்கு மாதங்
களின் பின் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது இந்தியப் புலனாய்
வுத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட வேளையில் அவர்களில்
இருவர் தற்கொலை செய்து
கொண்டனர். நளினி உயிருடன் கைது செய்யப்பட்டார்.)
கேள்வி:- நீ எப்போதாவது பிரபாகரனைப் பார்த்தாயா?
பதில்:- இல்லை நான் ஒருபோதும் பிரபாகரனைப் பார்த்ததில்லை.
கேள்வி: கரும்புலிகள் தற்கொலைத் தாக்குதலுக்கு போகுமுன்பு
பிரபாகரன் அவர்களுடன் கூடவே உணவு உண்பார் என்று
கேள்விப்பட்டிருக்கிறோம். நீயும் பிரபாகரனைச் சந்திக்கவில்லையா?
புதில்;- இல்லை அப்படியான சந்திப்பு எனக்கு ஏற்படவில்லை.
கேள்வி:- ஏன்? உன்னுடைய இலக்கு அவ்வளவு முக்கியமில்லையா?
பதில்- எனக்குத் தெரியாது, அப்படியான வாய்ப்பு எனக்கு
கிடைக்கவில்லை.
கேள்வி:- அப்படியானால் அது புலிகளின் வெறும் பிரச்சாரம்தானா?
பதில்;- இப்போது நான் புறப்படுமுன்னர் பொட்டம்மானின் பிரசங்கத்
தின் போது நான் கொல்லப்போகிறவர் மிகமுக்கியமானவர் என்று
சொன்னார்.
கணேஸ் தொடர்கிறார்.
இரண்டுவாரப் பயிற்சியின் பின்னர் தற்கொலை அங்கியை அணிந்தபடி
இலகுவாக நடக்கவும் ஓடவும் கற்றுக்கொண்டேன். இப்போது நான் உண்
மையான மனித வெடிகுண்டு என்று உணர்ந்து பெருமைப்பட்டுக்கொண்டேன்.
எமது போராட்டத்தில் தமிழீழத்தின் சரித்திரத்தில் எனது பெயர் பொன்
னெழுத்தக்களால் பொறிக்கப்படும். எனது குடும்பத்தினர் அவர்களது
வாழ்க்கை முழுவதும் கௌரவிக்கப்படுவார்கள்.
எனக்கு புதிய அடையாளம் தரப்பட்டது.
எனது முன்னேற்றமான பயிற்சிக்குப் பின்னர், நான் ஒரு முஸ்லிம்மாக
மாறவேண்டும். நான் ஒரு முஸ்லிம் வர்த்தகராக புதிய அடையாளம்
தரப்பட்டது. இந்தக்கால கட்டத்தில் முஸ்லிம் போல நான் தாடி வளர்த்தேன்.
முஸ்லிம் போல ஆவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. புலிகளின்
மருத்துவப் பிரிவு வந்து எனது ஆணுறுப்பின் தோலைக் கத்தரித்து
சுன்னத்துக் கலியாணம் செய்தார்கள். என்னை ஒரு முழு முஸ்லிம்
மனிதனாக மாற்றினார்கள்.
எனக்கு கொஞ்சம் சிங்கள மொழியும் கற்பித்தார்கள். எனக்கு மிகவும்
கடினமாக இருந்தது. என்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. என்னை
ஒரு முஸ்லிம் வர்த்தகராக பார்க்கும் முழுப்பயிற்சியும் எனக்கு அளிக்கப்பட்
டது. தற்போதைய விலைகள், வகைகள், நெசவின் தன்மை, நிறங்கள்
என்பன இன்னும் பல அடங்கும்.
நான் புதுக்குடியிருப்பிலிருந்து விசுவமடு சென்று அங்கிருந்து வவுனியா
செல்லும்போது எனக்கு முஸ்லிம் பெயரைக் கொண்ட அடையாள அட்டை
வழங்கப்பட்டது. என்னுடன் இன்னொருவரும் கூடவே பயணம் செய்தார்.
அவர் என்னை கொழும்பிலுள்ள என்னைக் கையாள்பவரிடம் ஒப்படைப்
பவராக இருந்தார். நான் என்னை கையாள்பவரை கொழும்பில் சந்தித்
தபோது அவர் என்னிடம் கூறியவைகள்.
நீ நான் சொல்லுவதைத்தான் செய்யவேண்டும். அப்போது உனக்கு
பிரச்சனையில்லை. நீ சரியாக இருப்பாய்.. எனது முதல் அடையாளம் நான்
மன்னாரிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் வர்த்தகர். ஏனக்கு 75,000 ரூபாய்
பணம் தரப்பட்டது. விசுவமடுவிலிருந்து வவுனியாவிற்கு புறப்படும்போது
படையினரின் சோதனைச்சாவடியில் எங்கு போகிறாய் என்று என்னிடம்
கேட்ட கேள்விக்கு துணிவகைகள் வாங்க வவுனியா செல்வதாக பதிலளித்
தேன். என்னை மேலும் பயணம் செய்ய அனுமதித்தார்கள். புதிய
அடையாளத்துடன் நான் முதல்முதலாக பயணம் செய்ய அனுமதித்தது
மிகவும் ஆறுதலாக இருந்தது.
எனது இரண்டாவது அடையாளம்
நான் வவுனியாவுக்குச் சென்றபோது எனக்கு இரண்டாவது அடையாள
அட்டை தரப்பட்டது. அதன்படி நான் ஒரு அனுராதபுரம் வாசி. எனக்கு
துணி வகைகளின் மாதிரிகளும் கொழும்பு பெற்றாவிலுள்ள வர்த்தகர்களின்
தொலைபேசி இலக்கங்களடங்கிய பட்டியலும் தரப்பட்டது. முஸ்லிம் வர்த்
தகராக யாரும் சந்தேகப்படாதவாறு நடமாட முடியும் என்பதை உணர்ந்து
கொண்டேன். அனுராதபுரத்திலிருந்து கொழும்பிற்கு எனது பயணத்தைத்
தொடர்ந்தேன். என்னைக் கையாள்பவாரால் வழங்கப்பட்ட வத்தளையில்
அல்விஸ் ரவுணில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றேன். எனக்கு குர்ஆனும்
செபமாலையும் தரப்பட்டது. என்னைக் கையாள்பவர் இந்தப்பகுதியில்
யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாமென்று எனக்கு ஆலோசனை
சொன்னார். புலிகளின் புலனாய்வுத் துறையினர் என்னுடைய ஒவ்வொரு
நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் சொன்னார். நான்
தப்பிக்க முற்பட்டால் கொல்லப்படுவேன் என்றும் எச்சரித்தார். யாராவது
பரிசோதனை செய்ய முயன்றால் அடையாள அட்டையைக் கொடுத்து
எப்போதும் முஸ்லிம் போல நடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.
யார் வந்தாலும் இஸ்லாம் மதத்தின் சில சொற்களை சொல்லி அசல் முஸ்
லிம்மாகவே பழகிக் கொண்டேன்.
நான் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் ஒரு தமிழரின் கடை இருந்தது.
எக்காரணம் கொண்டும் அந்தக கடைக்காரருக்கு என்னை அறிமுகப்படுத்தக்
கூடாது என்பது என்னைக் கையாள்பவரின் கண்டிப்பான கட்டளை. ஆந்தத்
தமிழரின் கடையில் எதும் பொருட்களைக் கொள்வனவு செய்தால்கூட நான்
அவருடன் அறிமுகமாக் கூடாது காரணம் நான புறப்படும் நாள் நெருங்கியிருந்
தது. நான் கடைக்கு அருகால் சென்றபோது அந்தக் கடைக்காரர் இன்
னொருவருடன் சத்தமான சிங்களத்தில் பேசிக்கொண்டிருந்தார். இது எனக்கு
ஆச்சரியத்தைக் கொடுத்தது. தமிழர்களுக்கு சிங்களவர்கள் பயங்கரமான
கொடியவர்கள் என்று பயிற்சியின்போது எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்
பட்டது.
எனது குறிக்கோளுக்குத் தயாராகும் நேரம்
ஒருநாள் என்னைக் கையாள்பவர் என்னிடம் வந்து என்னைத் தற்கொலைத்
தாக்குதலுக்கு தயாராகும்படியும் தற்கொலை அங்கிகள் மிக விரைவில
தரப்படும் என்றும் சொன்னார். ஆனால் நான் கொல்லப்போகும் இலக்கு யார்
என்பது எனக்குத் தெரியாது. நான் கேட்டபொழுது இரக்கு பற்றிய சகல
விபரங்களும் தொலைபேசிய+டாக வழங்கப்படும் என்று பதிலளித்தார். எனக்கு
ஒரு கைத்தொலைபேசியைத் தந்து புலிகளின் புலனாய்வுத்துறையின்
கண்காணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் தாக்குதல் இலக்கு,
அடையாளம்.மற்றும் எஞ்சிய விபரங்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து
தொலைபேசியூடாக வழங்கப்படும் என்றும் கையாள்பவர் தெரிவித்தார்.
பின்னர் என்னை வாகனம் ஒன்றில் ஏற்றி கொழும்பு நகரைச் சுற்றி
அறிமுகப்படுத்தினார்.
( நான் குறுக்கிட்டு கணேசிடம் கேள்வி கேட்டேன்.)
கேள்வி:- கொழும்பு நகரையும் அங்கு வாழும் மக்களையும் பற்றி
என்ன நினைக்கிறாய்
புதில்:- நான் ஒரு வித்தியாசமான உலகத்திற்கு வநதிருக்கிறேன்
என்று நான் உண்மையில் நினைத்தேன்
கணேஸ் தொடர்ந்தார்.
பகல் வேளையில் என்னைக் கையாள்பவர் கொழும்பு நகரைச் சுற்றி
அழைத்துச் சென்ற போது நான் அவருடன் நட்பாகிவிட்டேன். அப்
போது அவரிடம் எனது குடும்பத்தினர் பற்றி விசாரித்தேன். தான்
விசாரித்துவிட்டு பின்னர் சொல்வதாக அவர் என்னிடம் சொன்னார்.
எனது இரண்டு ககோதரிகளையும் சகோதரனையும் புலிகள் இயக்கத்
தில் இணைத்துவிட்டதாகவும் அவர்களை யுத்தப் பிரதேசத்திற்கு
புலிகள் அனுப்பிவிட்டதாகவும் ஒருநாள் என்னிடம் அவர் சொன்னார்.
நான் அதைக்கேட்டபோது எனது சகோதரர்கள் உயிருடன் திரும்பி
வரமாட்டார்கள் என்று உணர்ந்தேன். நான் இன்னும் உயிர் வாழ
விரும்பவில்லை. நான் உதவியற்றவனாக ஆகிவிட்டேன். இருந்து என்
நிலையிலேயே நான் இருந்தேன். என் தற்கொலை அங்கி மற்றும்
இலக்கு பற்றிய விபரங்களுக்காகவும் காத்திருந்தேன்.
ஒரு நாள் இரவு என்னைக் கையாள்பவர் எனது கதவிற்கு வெளியில்
நின்று என் பெயர் சொல்லி அழைத்தார். நான் குழம்பிப் போனேன்.
நான் அவரைச் சந்திக்க வெளியில் சென்றபோது அங்கு என்னைக்
கைது செய்யக் காத்து நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் என்னைக்
கைது செய்தனர். அப்போது கேள்விக்குறி என் மனதில் எழுந்தது.
நான் ஓர முஸ்லிம் வர்த்தகர். ஆனால் அது தாமதமாகி விட்டது.
என்னைக் கையாள்பவர் சகல உண்மைகளையும் தனது வாக்குமூலத்
தில் ஒப்புவித்துவிட்டார். என்னுடைய சயனைட் குப்பியையும்
பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி விட்டனர்.
நான் குறுக்கிட்டு கணேசிடம் கேட்ட கேள்வி
கேள்வி:- நீ இன்னும் உனது தற்கொலைத் தாக்குதலை நடத்த
தயாரா?
புதில்:- இல்லை, இனி நான் செய்யமாட்டேன்.
கேள்வி:- ஏன்
புதில்:- எங்களுடைய தலைமை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.
கேள்வி:- பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதை நீ நம்புகிறாயா?
புதில்:- பிரபாகரன் இராணுவத்தினரால் கொல்லப்படுவார் என்று
நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பிரபாகரனை ஒருபேர்தும்
இராணுவத்தினர் கொல்லமுடியாது. பிரபாகரன் உயிருடன் பிடிபடமாட்
டார் சயனைட் குப்பியைக் கடித்து தற்கொலை செய்வார் என்று புலி
உறுப்பினர்கள் திடமாக நம்பியிருந்தார்கள். பின்னர் அவரை
இராணுவம் சுட்டுக் கொன்றுவிpட்டது. பிரபாகரன் இராணுவத்தினர்
சுட்டதில் இறந்துவிட்டார் என்று கே.பி உறுதிப்படுத்தியதை கேள்விப்
பட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இராணுவத்திடம் உயிருடன்
பிடிபடாமல் அல்லது கொல்லப்படாமல் இருக்க சயனைட் குப்பியை
கடிக்கவேண்டும் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
பிரபாகரன். அந்தக் கொள்கையை பிரபாகரனால் கடைப்பிடிக்க
முடியவில்லை.
கணேசின் கண்களில் இருந்து கண்ணீர் தாடை வரை வழிந்தது
கேள்வி:- நீ ஏன் கண்ணீர் வடிக்கிறாய்? பிரபாகரனை நினைத்தா?
அல்லது பொட்டம்மானை நினைத்தா?
பதில்:- நான் அவர்களுக்காக அழவில்லை. எனது இரு
சகோதரிகளையும் சகோதரனையும் நினைத்து அழுகிறேன். அவர்கள்
உயிருடன் இருக்கிறார்களா என்று உங்களால் அறிய முடியுமா?
தயவு செய்து எனக்காக உங்களால் இதைச் செய்யமுடியுமா?
கணேசுடனான செவ்வியை இத்தோடு நிறுத்திவிட்டேன். இரக்கமற்ற
கரும்புலி கண்ணீர் வடிப்பதை ஒருதடவை கண்டேன். கண்ணீர்
சிந்தும் தன்மையும் அவர்களிடம் உள்ளதா? எந்தக் கொடூரமானவர்
களுக்கும் மென்மையான இதயம் உண்டு. இவர்கள் மூளைச்சலவை
செய்யப்பட்டு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்
தப்பட்டவர்கள். எமாற்றம் தரும் ஈழக்கனவுக்காக கணேஸ் ராஜதுரை
போன்ற எத்தனை ஆயிரம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை
பலியிட்டதற்காக கண்ணீர் வடிக்கிறார்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment