'உயிர்க்கும் தமிழீழம்" நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு, ஐரோப்பா விஜயம்
'உயிர்க்கும் தமிழீழம்' என்ற பெயரில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம், 2ம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் மாபெரும் பேரெழுச்சி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதில் கலந்துகொள்வதற்காக நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கவிருப்பதாக தெரியருகிறது.
இதில் 'உயிர் கொடுத்து வளர்த்த தலைவன் இலட்சியம் தோற்காது" என்ற கொள்கைப் பிடிப்போடு அணிதிரளுமாறும் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ் மக்களின் எதிர்காலம் சார்ந்த சிறைப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் சார்ந்தும்
அதற்குரிய வேலைத் திட்டங்கள் சார்ந்தும் இந்நிகழ்வில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு, எதிர்வரும் 1ம், 2ம் திகதி நிகழ்வுகளில் சுவிஸ், ஜேர்மனியில் நடைபெறும் கருத்தமர்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
இதனையடுத்து 2ம் நாள் சுவிஸ் சூரிச் அல்விஸ் கூட்டிலி மண்டபத்தில் நடைபெறும் மாபெரும் பேரெழுச்சி நிகழ்வான 'உயிர்க்கும் தமிழீழம்' நிகழ்விலும் கலந்துகொண்டு எதிர்காலப் பணிகள் தொடர்பாக கருத்துரை வழங்கவுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான விசுவநாதன் உருத்திரகுமாரன் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் சுவிஸ் தமிழர் பேரவை தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment