தந்திரிமலையில் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு தாக்குதல்
மன்னார் பிரதான இராணுவ முகாமின் எல்லையான தந்திரிமலையில் அமைக்கப்பட்டிருந்த காவலரண் மீது விடுதலைப் புலிகள் மற்றுமொரு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிவில் பாதுகாப்புப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் இரண்டு ஊர்காவற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சோதனைச் சாவடியில் ஊர்காவற்படையச் சேர்ந்த நால்வரும், காவல்துறை அதிகாரியொருவரும் கடமையில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது.
தாக்குதலின் பின்னர், பிரதேசத்தில் இராணுவத்தின் மேற்கொண்ட தேடுதலின் போது, சொக்லட் மற்றும் மெலிபன் பிஸ்கட் அடங்கிய 15 பொதிகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது, இது விடுதலைப் புலிகளின் தாக்குதல் பாணியில் காணப்படுவதாகவும், இந்தத் தாக்குதலை அவர்களே மேற்கொண்டிருக்க வேண்டுமென இராணுவம் கருதுவதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் சிறு, சிறு குழுக்களாக வன்னி மற்றும் முல்லைத்தீவு காடுகளில் ஒழிந்திருந்து கடந்த காலம்முதல் இவ்வாறான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் இதற்கு முன்னரும் வெளிவந்திருந்தன.
விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு, நாட்டை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், விடுதலைப்புலிகளின் அணி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதனால் உயிரிழப்பக்கள் ஏற்படுவதாகவும் இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment