அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல
அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல என்று தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, புலிகள் பெருந்தொகையான அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு எதிராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப் பியது கிடையாது. என்றாலும் பயங்கரவாதம் இப்போது ஒழித்துக் கட்டப்பட்டிருக்கின்றது.
கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டிருக்கின்றன. சுமார் மூன்று தசாப்தங்களாகப் பின் னடைந்துள்ள பிரதேசங்களை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது. வெற்றிபெற முடி யாத திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமி ல்லை.
தமிழ் தேசியக் கூட்டமை ப்பு எம்.பிக்கள் அபிவிருத்தி க்கான சர்வகட்சிக்குழு கூட் டத்தில் அண்மையில் பங்கு பற்றினார்கள். இது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். பிர பாகரன் உயிருடன் இருந்திரு ந்தால் அவர்கள் இக்கூட்டத் தில் பங்குபற்றி இருக்கமாட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.ஒருவர், பிரபாகரன் உண்மையில் கொல்லப்பட்டு விட்டாரா என்று என்னிடம் கேட்டார். அந்தளவுக்கு அவர்கள் பிரபாகனுக்கு பயந்து செயற்படுகி றார்கள்.
அவசரகாலச் சட்டம் முழு நாட்டிலுமே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. மாறாக இது தமிழ் மக்கள் செறி வாக வாழும் வடக்கு, கிழக்கில் மட்டும் நடைமுறை ப்படுத்தப்படவில்லை. ஆகவே அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. இச்சட்டம் நடைமுறையில் இருப்பதன் பயனாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுகின்றனர்.
இதேவேளை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிழல் அரசாங்கம் என்ற மாயை கே.பி. பரப்பி வருகின்றார். முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கும் புலிகளால் இதனை ஒரு போதும் சாத்தியப்படுத்த முடியாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண் டும்.
தமிழ் மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நிவர்த்திக்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளேன். தமிழ் மக்களின் குறைக ளையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி போன்ற தேசிய கட்சியில் இணைந்து செயற்படுவது அவசியம்.
தமிழ் மக்கள் மத்தியில் சுமார் 15 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றால் தமிழ் மக்க ளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. இவற்றை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை களை நடத்த வேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment