யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! TULF அலுவலகம் மற்றும் TNA அலுவலகங்களை தாக்கியும் சுவரொட்டிகளை கிழித்தும் தமிழ் ஆயுதக்குழு அட்டகாசம்!
யாழ்ப்பாணத்தில் மாநகரசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் வன்முறைகளும் அங்கே ஆரம்பமாகியுள்ளன. தமிழ் கூட்டமைப்பின் வேட்பாளர் கனகரட்ணம் என்பவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளர் அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளார்.
யாழ் நகரில் வைது தாக்கப்பட்ட கூட்டமைப்பின் வேட்பாளரிடம் இருந்த துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று.
அரசியல் கட்சிகள் இரண்டின் அலுவலகங்கள் இரவோடிரவாக தாக்கப்பட்டதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி கொடிகளும் அறுத்து எறியப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன.
யாழில் உதயன், தினக்குரல் பத்திரிகைகள் எரிய+ட்டப்பட்டதன் பின்னர் இடம்பெறும் இரண்டாவது தேர்தல் வன்முறை சம்பவமாகும் இவ் நடவடிக்கைகள் என்று யாழ் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment