விடுதலைப் புலிகளே தமிழ் மக்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர் – கருணா:
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாக தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
மீக நீண்ட காலத்திற்கு பின்னர் வன்னி மக்கள் உண்மையான சுதந்திரத்தை தற்போது அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பென்தொட்டவில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளின் காரணமாக 200,000த்திற்கும் மேற்பட்ட தமிழர்களை பாதுகாக்க முடிந்ததென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மக்களுக்கும் மரண பயமின்றி வாழக் கூடிய ஓர் சூழ்நிலையை ஜனாதிபதியும் பாதுகாப்பு படையினரும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment