நாடு கடந்த அரசாங்கத்தை கனடாவின் சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்குமான தமிழர் அமைப்பு நிராகரித்தது
விடுதலைப் புலிகள் அமைப்பின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிராகரிப்பதாக கனடாவின் சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்குமான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதனின் இந்தக் கருத்தானது, மீண்டுமொரு உள்நாட்டு யுத்தத்தைக் கொண்டுவரக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்துமெனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தங்கியிருக்கும்போது, அந்த மக்களுக்கு உதவியளிக்காது, நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பது என்ற கருத்தை வெளியிடுவது கண்டித்தக்கதெனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கில் எஸ்.பத்மநாதன் இந்தக் கருத்தை வெளியிட்டுவருவதுடன், பத்மநாதனின் இந்;தக் கருத்து எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படவிருக்கும் அரசியல்த் தீர்விற்கு ஆபத்தானதாக அமையுமெனவும் கனடாவின் சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்குமான தமிழர் அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பாதுகாக்கவேண்டுமென்பதுடன், அந்த மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தவேண்டுமெனவும் கனடாவின் சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்குமான தமிழர் அமைப்பு குறிப்பிட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment