வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் மக்களைச் சென்றடையும்?
புலம்பெயர் மக்களினால் ஈழத்து மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர், இன்னும் சில தினங்களில் வவுனியா முகாமிலுள்ள மக்களைச் சென்றடையுமென நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
வணங்கா மண் பொருட்களை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விடப்போவதாக தென் இலங்கை செய்திகள் தெரிவித்திருந்தன.
20 நாட்களுக்கு மேலாக துறைமுகத்தில் தரித்து நிற்கும் பொருட்களை ஏலம்விட சட்டப்படி இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதெனவும் அந்தச் செய்திகள் தெரிவித்திருந்தன. குறித்த கெடு நாளையுடன்
முடிவடைவதால் அவை ஏலத்தில் விடப்படலாம் என சந்தேகம் வெளியாகியிருந்தது.
எனினும், இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பொருட்களை அனுப்பியதிலிருந்த ஆவண மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடாத நிலையில் வணங்கா மண் நிவாரணப் பொருட்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியெடுப்பதில் சிக்கல் காணப்பட்டது.
எனினும், இந்தியாவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுடன் வணங்கா மண் செயற்பாட்டுக் குழுவினர் தொடர்புகொண்டு இந்தச் சிக்கலை முடிவிற்கு கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாளை அல்லது மறுதினம் பொருட்களை விடுவிக்க முடியுமெனவும் இன்னும் சில தினங்களில் இந்தப் பொருட்கள் முகாமிலுள்ள மக்களுக்கு விநியோகிக்க முடியுமெனவும் செயற்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment