இறைமைக்கு பங்கமில்லாத தீர்வுக்கு தயார்: என். ஸ்ரீகாந்தா
பிரிவினைக்குப் பதிலாக இணைந்து வாழும் நிலை பற்றிச் சிந்திப்பதற்கும், பிளவு களை மறந்து ஒற்றுமையா கச் செயற்படுவதற்கும் தயாரென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அதே நேரம், நாட்டின் ஒற்றுமை, இறைமை, சமத்துவத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தீர்வொன்றைக் காண்பதற்குத் தாயரென்றும் கூட்டமைப்பு உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதியமைச்சுக்கான குறை நிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீகாந்தா, “அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான நடவ டிக்கைகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளது.
இனம், மதம், கலாசாரம் என பல வகையிலும் பொது அம்சங்களைக் கொண்டவர்கள் நாம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வைக்காண ஒன்றிணைந்து செயற்படுவோம்” எனவும் சர்வகட்சிக்குழு இதற்கு சிறந்ததொரு ஆரம்பமாகும்.
நாம் அனைவரும் இந்நாட்டு மைந்தர்கள் என்ற வகையில் நாட்டின் இறைமை, ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் தீர்வொன்றைக் காண்போம்.
எல்லாக் காலத்திலும் நாம் விடுதலைப் புலிகளின் சரி பிழைகளைச் சுட்டிக்காட்டியே வந்துள்ளோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே எமது ஒருமித்த எண்ணமாக இருந்தது.
இன முரண்பாட்டுக்கு ஒரு நிலையான தீர்வைக் காண்பதில் நாம் அக்கறையாயுள்ளதால்தான் நாம் ஜனாதிபதியின் அழைப்பையேற்று சர்வகட்சிக்குழு கூட்டத்திற்குச் சென்றோம். அக்கூட்டம் நல்ல ஆரம்பமாகவிருந்தது.
நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு மூவினங்களும் இணைந்து பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது, யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.
மாறி மாறி வந்த அரசாங்கங்களால் எமது கோரிக் கைகள் மறுக்கப்பட்டு எமது மக்கள் ஓரங்கட்டப்பட்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். மூன்று இலட்சம் மக்கள் முகாங்களில் அவதிப்படுகின்றனர். இவர்களை விரைவாக மீளக்குடிய மர்த்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மீளக்குடியமர்த்துவதற்கான நிலை ஏற்படும் வரை அரசாங்கத்திற்குச் சுமையாக இல்லாது இம்மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் சென்று வாழ அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு இவர்களை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் தயாராகவுள்ளனர்.
இம்மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை காண வேண்டும். அரசாங்கத்தின் ஆக்க பூர்வமான சகல நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளது.
எமது வரலாற்றைப் பலரும் பலவிதமாகக் கூறுகின் றனர். எமக்கு ஒரு சிறந்த பாரம்பரியம் உள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கு மிடையில் நிகழ்ந்த உறவுகள் தொடர்ந்துள்ளன. எமக்குள்ளே பல பொதுவான அம்சங்கள் பண்புகள் உள்ளன.
இந்நிலையில் பிரிவினைக்குப் பதிலாக இணைந்து வாழும் நிலைபற்றி சிந்திப்போம். பிளவுகளைப் பார்க்காமல் ஒற்றுமையைக் கவனத்திற் கொண்டு செயற்படுவோம். ஒரே நாட்டின் மைந்தர்களாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
தேசியப் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த அரசியல் தீர்வொன்றை எட்டுவோம். நாட்டின் ஒற்றுமை, இறைமை, சமத்துவத்திற்கு பங்கம் விளைவிக்காத வகையில் இத்தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இணையத்தள செய்தி
0 விமர்சனங்கள்:
Post a Comment