நடிகர் ராஜன் பி தேவ் காலமானார்...

எல்லா படத்திலேயும் வில்லனாக வந்து வயிற்றிலே புளி கரைக்கும் ராஜன் பி தேவ், தனது ரசிகர்களை கவலை கடலில் தள்ளிவிட்டு இயற்கை எய்திவிட்டார்.
அவர் கடைசியாக நடித்து தமிழில் வெளிவந்த படம் மலையன். இதில் ஆரம்பத்தில் வில்லனாக தோற்றமளித்து இறுதியில் நல்லவராக வெளிப்படுவார். தனது இறுதிகாலம் அறிந்துதான் நல்லவர் இமேஜோடு விடை பெற்றுக் கொண்டாரோ என்னவோ?
சூரியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஜன் பி தேவ். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் சுமார் 520 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடந்த வாரத்தில் மிக ஆபத்தான நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராஜன்.பி.தேவ். அவருக்கு சர்க்கரை நோயும், நுரையீரல் பாதிப்பும் இருந்து வந்தது. தொடர்ந்து இரத்த வாந்தி எடுத்து வந்தாராம்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று காலை இயற்கை எய்தினார். கேரள திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment