பாருங்கள் எப்படியெல்லாம் சிங்களவன் எங்களை பாவிக்கிறான்
வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களிற்கான உதவிகளை சிறீலங்கா அரசு பூர்த்தி செய்யாத நிலையில், இந்த மக்களைக் காரணம்காட்டி புலம்பெயர் நாடுகளில் உள்ள சிங்களவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டுள்ள “புதிய பிரித்தானியாவுக்கான சிறீலங்காவின் சங்கம்” என்ற அமைப்பு அண்மையில் லோவல் போல்க் களியாட்ட நிகழ்வில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களிற்கு எனத் தெரிவிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இந்த நிதி எந்த வகையில் அந்த மக்களைச் சென்று சேருகின்றது என்பது பற்றி இந்த சங்கத்தின் தலைவர் சித்ரால் டி மெல் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் “அப்பி வெனுவின் அப்பி” என சிங்களத்தில் அழைக்கப்படும் “நமக்காக நாம்” என்ற சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு, பிரித்தானியவாழ் சிங்கள மக்கள் 6 மாத காலத்தில் ஒரு இலட்சம் பவுண்ஸ் நிதியைச் சேகரித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment