ஒரு முட்டாளின் உதாரணம்
நேற்று இரவு நான் பறந்து கொண்டிருந்த போது இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலக்காட்சியில் மக்கள் நேரடியாக தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருப்பது என் காதுகளில் கேட்டது. சரி அப்படி என்னதான் கதைக்கிறார்கள் என்று சிறிது நேரம் இருந்து கேட்டுவிட்டு போவோம் என்று அருகிலிருந்த மரக்கொப்பு ஒன்றின் மீது அமர்ந்தேன்.
அந்நிகழ்வுக்குரிய தலைப்பு ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது. தலைப்பு இதுதான்: "தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்". அந்நிகழ்வில் பங்குபற்றிய 90 வீதமானோர் அவர்கள் வழங்கிய தலைப்பை தவிர்த்துவிட்டு ஏதோ தமக்கு தெரிந்தவற்றையும் தமக்கு விருப்பமானதைப்பற்றியுமே கதைத்தனர். இடையிடையே அந்நிகழ்வை நடத்துபவர் குறுக்கிட்டு "தலைப்புடன் சம்பந்தபட்ட கருத்துகளை வையுங்கள்" என்று எவ்வளவோ சொல்லியும் அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. சிலர் கதைக்காமலேயே சிறிது நேரம் லைனில் நின்று லைனை புளக்பண்ணிவிட்டு சென்றுவிட்டனர்.
அரபு நாடொன்றில் பணிபுரியும் இலங்கை முஸ்லீம் நபர் ஒருவர் சற்று விறுவிறுப்புடன் கதைக்கத் தொடங்கினார். தொடங்கியவுடன் மஹிந்த ராஜபக்சாவிற்கு நன்றி தெரிவித்தார். இவ்வளவு பிரச்சினைக்கும் புலிகல்தான் காரணம். புலிகள் இல்லையென்றால் அங்கே பிரச்சினையே இருந்திருக்காது.
உண்மையிலேயே இலங்கை ஒரு சுதந்திரமான நாடு... அதுவும் தமிழர்கள் மிகவும் சுதந்திரமாக வாழக்கூடிய நாடு இலங்கைதான். அதுவும் ஒரு பௌத்த நாட்டில் தமிழர்களுக்கு உள்ள இவ்வளவு சுதந்திரம் உலகில் வேறெந்த நாட்டிலும் கிடையாது. ஏன் இந்தியாவில் கூட தமிழர்களுக்கு இவ்வளவு சுதந்திரம் கிடையாது. கலைஞர் கருணாநிதி கூட தமிழீம் இலங்கையில் சாத்தியப்படாது என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவருக்கே நன்றாக தெரியும் பௌத்த நாட்டில் தமிழர்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டு என்று. உதாரணத்திற்கு ஒன்று சொல்லுகிறேன் 7 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் அவர்களது பாஸ்போர்ட்டில் தமிழ் மொழியில் எதுவும் இல்லை. அதேநேரம் நமது இலங்கை பாஸ்போர்ட்டில் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றே போதும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு என்று சொன்னார்.
நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருப்பவரும் ஓம்,ஓம் நீங்கள் சொல்வது சரிதான் என்ற தொணியில் தலையாட்டிக் கொண்டிருந்தார். இதில் மேலும் ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இந்நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தவரும் ஒரு முஸ்லீம்தான்.
இப்படிப்பட்ட வடிகட்டின முடாள்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்தபடியே அங்கிருந்து பறந்து சென்றேன்.
- ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment