புலம்பெயர் தமிழர்களின் ஆரோக்கியமான சிந்தனை
வட மாகாணத்தில் பல்வேறு தொழில் துறைகளை ஆரம்பி ப்பதற்கு புலம் பெயர் தமி ழர்கள் ஆர்வம் கொண்டிருப் பது நல்லதொரு புதிய ஆரம்பமாகும். வட பகுதியை துரித கதியில் மீளக் கட்டி யெழுப்புவதற்காக அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள ‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்துக்கு மேலும் உரமூட்டு வதாகவே புலம்பெயர் தமிழர்களின் இன் றைய ஆர்வம் தென்படுகிறது.
வடக்கு கிழக்கில் கடந்த இருபத்தைந்து வருட காலத்துக்கு மேலாக நிலவிய யுத்த சூழல் காரணமாக அங்கிருந்து வெளிநாடு களுக்கு புலம் பெயர்ந்து சென்ற தமிழர்க ளில் கல்விமான்கள், வர்த்தகர்கள் என்றெ ல்லாம் பல்வேறு தரப்பினர் அடங்குகின்ற னர். இவர்களெல்லாம் தாங்கள் கால் பதித்த நாடுகளில் தற்போது நிரந்தரமாகக் குடியேறி விட்டனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் கல்வித் துறையிலும் வர்த்தகத் துறையிலும் உச்ச நிலையை அடைந்துள்ளனர். தாங்கள் குடி யேறி வாழ்கின்ற நாடுகளில் மாத்திரமன்றி பல்வேறு மேலைத்தேய நாடுகளிலும் இவ ர்கள் தொழில் துறைகளை ஆரம்பித்து நட த்துகின்றனர்.
இலங்கையிலிருந்து நீண்ட காலத்துக்கு முன்னர் புலர் பெயர்ந்து சென்ற தமிழர்கள் மேற்கு நாடுகளில் மாத்திரமன்றி இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளிலும் வர்த்தகத்துறைகளில் பிரகாசித்து வருகின்றனர். அதே சமயம் புலம் பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தயங்கி வந்துள்ளனர். நீண்ட காலமாக யுத்தம் நிலவி வந்த பிர தேசமொன்றில் பாரிய முதலீடுகளை மேற் கொள்வதற்கு அவர்கள் முன்வராததில் நியாயம் உண்டு.
ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. வடக்கு, கிழக்கில் யுத்தம் முற்றாக முடிவுக்குக் கொண்டு வரப் பட்டிருக்கும் இன்றைய நிலையில் இலங் கையில் முதலீடு செய்வதற்கு பல்வேறு நாடு கள் முன்வந்துள்ளன. வடக்கு, கிழக்கில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதில் உலக நாடுகளிலுள்ள முன்னணி நிறுவனங் கள் ஆர்வம் கொண்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கையி லிருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள தமிழ் வர்த்தகர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் முத லீடு செய்வதில் தற்போது முயற்சித்து வரு கின்றனர். அமைதிச் சூழல் தோன்றியுள்ள இவ்வேளையில் வெளிநாடுகளிலுள்ள இலங் கைத் தமிழர்கள் தங்களது பிறந்த மண்ணை மீளக் கட்டியெழுப்புவதில் ஆர்வம் கொண்டு ள்ளனர்.
யாழ். மண்ணில் தொழில்துறைகளை ஆரம் பிப்பது ஒருபுறமிருக்க தங்களது சொந்த மண்ணில் வாழ்கின்ற இளைஞர், யுவதிக ளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாமென்ற விருப்பதையும் புலம் பெயர் தமிழர்கள் கொண்டுள்ளனர்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்துக்கு சமாந்தரமான முறை யில் புலம்பெயர் தமிழர்களின் தொழில் முய ற்சிகளும் அமைவதென்பது அதிர்ஷ்டமான தொரு ஆரம்பமாகும். யாழ். மற்றும் வன்னி மாவட்டங்கள் துரித கதியில் அபிவிருத் தியடைவதற்குரிய அறிகுறியென்று இத னைக் கொள்ளலாம்.
வட மாகாணத்தின் முக்கிய பொருளாதாரத் துறைகளாக விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் ஆகியவை முன்னர் விளங்கின. யுத்தம் தீவி ரமடைந்த பின்னர் அங்கு பொருளாதார தொழில் துறைகள் அனைத்துமே முடங்கிவிட்டன.
யுத்தம் முடிவடைந்துள்ள இன்றைய நிலையில் தொழில் முயற்சிகள் புத்துயிர் பெற்று வரு வதைக் காண முடிகிறது. யாழ். குடாநாட் டில் கடல் வலயத் தடை முற்றாக நீக்கப் பட்டுள்ளதனால் மீன்பிடித் தொழிலும் படிப்படியாக விருத்தியடைந்து வருகிறது. யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை முற்றாகத் திறக்கப்பட்டதும் அங்கிருந்து மீன் கள் தென்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படு வதும் சாத்தியமாகிவிடும்.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத் தொழில் துறைகள் மாத்திரமன்றி புதிய கைத்தொழில் முயற்சிகளும் அங்கு ஆரம்பிக்கப்படுவதற் குரிய வழி தற்போது பிறந்துள்ளது. புலம் பெயர் தமிழர்களின் முதலீடுகள் வடக்கின் அபிவிருத்திக்கான முக்கிய உந்து சக்தியா கவே அமையும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment