இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Wednesday, July 15, 2009

உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ.. இல்லாட்டி நீங்க துரோகியள்…

இதென்ன இழவு வில்லங்கமெண்டு யோசிக்கிறியளெல்லோ. ஏற்கனவே புலத்து ஏகபிரதிநிதிகளையும் வணங்காமண்ணைக் கல்கத்தாவில உடைக்கிறதையும் உடைச்சுச் சொன்னதில கடுப்பேறிக் கன அவதாரங்களில வெருட்டு மிரட்டு விடுகிற சாமிகளே ! நீங்கள் துரோகியேண்டாலும் சரி றோவெண்டாலும் சரி உண்மைகள் வெளிவருவதை நீங்கள் நேத்தி வைச்சுக் கும்பிடுற கடவுளுகளாலையும் இனிக் காப்பாற்றேலாது. உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்குதேயில்ல. உளவாளி எப்பவும் நல்லவனாகவே நடிப்பான். எங்களைமாதிரி உங்களைப் போல உருவேறி உண்மையளைச் சொல்றவையளாக இருக்காயீனம். உங்களை எங்களையெல்லாம் உளவாளியா வைச்சிருந்தா எந்த உளவு அமைப்பும் உளவு பாக்கேலாது மாடுகட்டி உழவு செய்யத்தான் முடியும்.

சரி இனி வியசத்துக்கு வாறன்… புறநிலை அரசை உருவாக்கும் முயற்சியில் திரு.பத்மநாதன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட உருத்திரகுமாரைப் புறக்கணிக்கட்டாம். இதை நான் சொல்லேல்ல. இது புலத்தில இப்ப குறுநிலமன்னர்களாக விளங்கும் தலைகளிடமிருந்தே வருகிறது. இன்னும் ஆயுதப்போராட்டம் செய்து தமிழீழ அரசை நிறுவுவோம் என்று இங்கிருந்து குரல் விடுவோரே! இந்தக் கனவுகளையும் உங்கள் கற்பனைகளையும் போரால் பாதிக்கப்பட்டவர்களாலோ மற்றும் அந்த மக்களில் கரிசனையுள்ளோராலோ நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

‘வணங்காமண் பேரீச்சம்பளத்துக்குப் போகுது‘ என்று சொன்னதுக்கு அடுத்து யேர்மனியிலயிருந்து வன்னிக்கப்பல் விடவுள்ள வன்னிரெக்கிலிருந்து சில நாட்களுக்கு முதல் ஒரு தொ(ல்)லைபேசி. அழைச்ச அண்ணாச்சி வன்னிரெக்கின் உசிர். (கேக்கப்படாது மற்றவை தாங்கிறதெல்லாம் என்னெண்டு) பென்சன் எடுத்திட்டு ஊருக்கு சமாதான காலத்தில் உலாத்துப் போட்டு வந்து தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் என்றெல்லாம் ஊதின சங்கு இவர்.

சமாதானகாலம் வந்ததும் இவர்கள் கனவு கண்டது என்னெண்டா…., கெதியில தமிழீழம் வந்திடும் பென்சன் எடுத்திட்டு வன்னியில போய் புலிகளுக்கு ஆலோசகர்களாகவும் , அமைச்சர்களாகவும் , புனர்நிர்மாண நிறுவனர்களாகவும் ஆகலாம் என்றது தான். அந்தக்கனவிலை அந்த மண்ணின் நிமிர்வு தியாகம் உழைப்பு எல்லாத்தையும் மண்மூடிப்புதைக்கும் வரை இந்த ஆலோசகர்கள் ஆங்கிலம் படித்த அதிமேதாவிகள் ஒருவரும் விஸ்கியில மூழ்கியிருந்த தலையை நிமித்தவேயில்லை. முள்ளிவாய்க்காலில் எங்கள் முதிசங்கள் உயிர்களை இழக்கும் வரை இவர்களுக்கு ஒண்டுமே தெரியேல்ல.

3தாசாப்தங்கள் தான் நேசித்த தலைவனைப் போராளிகளை இழந்த உண்மையை வெளியில் சொன்னார், விடுதலைப் புலிகளால் உலகத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பத்மநாதன் அவர்கள். எந்த மக்களுக்காகத் தங்களைக் கருக்கினார்களோ , தியாகங்களைச் செய்தார்களோ அந்த 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் கனவெல்லாம் பொடியான உண்மையைச் சொன்னதற்காக இந்த ஆங்கிலம் படித்த மேதாவிகளாலேயும் இந்த மேதாவிகளின் குரல்களை நம்பிய அப்பாவிகளாலும் பத்மநாதன் துரோகியாக்கப்பட்டார். அத்துடன் முடியவில்லை துரோகப்பட்டம். அவரது செய்தியை வெளியிட்ட ஊடகர்களை , ஊடகங்களையெல்லாம் (குறிப்பாக ஜீ.ரீ.வி) ஒதுக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டது இந்த இயலாத இயங்கிகள்.

இதுவரையான தவறுகள் தீமைகள் யாவையும் சீர்தூக்கிப்பார்த்து பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட புறநிலை அரசில் இடம்பெற்றுள்ளவர்கள் வெறும் பொழுது போக்கிகள் போலத் தெரியவில்லை. எல்லோருமே பேராசிரியர்கள் கல்விமான்கள். ஆனால் இத்தகையதொரு கூட்டணியை இதுவரை காலமும் வைக்கல்பட்டடையைக் கிழறிய சிங்கங்கள் சீறிக்கொண்டு எதிர்க்கின்றனர். இக்குழுவின் பொறுப்பை வகிக்கும் சட்டநிபுணர் உருத்திரகுமார் அவர்களை வேண்டியபடிக்கு விமர்சிக்கின்றனர். தொ(ல்)லைபேசியில் உருத்திரகுமார் பற்றி ஊதித்தள்ளியவர் சொன்னதிலிரந்து சிலவற்றைக் கீழே தருகிறேன்.

வணங்காமண்ணை பேரிச்சம்பளத்துக்குப் போகுதெண்டு நக்கலடிச்சிட்டியள். அதுகூடப் பறவாயில்ல அதை ஏற்பாடு செய்த முக்கியமான ஆக்களுக்கெல்லாம் எப்பிடி அனுப்புவீங்கள் ?(சிவனறிய அந்த முக்கியங்களை அந்த அண்ணாச்சி சொன்னாப் பிறகும் ஆரேண்டே அவையளை எனக்குத் தெரியாது) எங்களுக்குத் தெரியும் கப்பல் போகாதெண்டு ஆனால் நாங்கள் அனுப்பினனாங்கள். ஏனெண்டா எங்கடை பலத்தை உலகத்துக்கும் மகிந்தவுக்கும் காட்ட. கப்பல் போகுமெண்டு நீங்கள் நம்பினதுக்கு நாங்கள் பொறுப்பில்ல…. அங்கை வணங்கா மண்ணில வாற அரிசியைச் சாப்பிடச் சனம் இருக்கேல்ல. போராட்டமெண்டா இதெல்லாம் வரும்.

சரி எங்களைக் கிழிச்சியள். இப்ப உருத்திரகுமாரை என்ன செய்யப் போறியள் ? உருத்திரகுமார் தலைமை தாங்கினா தமிழன் இன்னும் முப்பது வருசம் உய்ய மாட்டான். உருத்திரகுமார் இதுவரை சட்டநிபுணத்தால என்ன புண்ணாக்குப் புடுங்கினவர் ? அகதியளுக்கு கேஸ் செய்யிறவர். அவராலை எப்பிடித் தமிழீழப்புறநிலையரசை நிறுவ ஏலும் ? பத்மநாதன் துரோகி. ரண்டு துரோகியளின்ரை கையிலயும் தமிழன்ரை விதி நாறப்போகுது. அவரைவிடப்படிச்சவையள் எவ்வளவு பேர் இருக்கினம் எங்களுக்குள்ள (அவர் தன்னையும் படிச்ச லிஸ்டிலை சொல்றார்) அவையை ஏனுந்தப் பத்மநாதன் தெரிவு செய்யேல்ல ? (வெற்றிடங்கள் இன்னும் உள்ளதாக பத்தநாதன் உருத்திரகுமார் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்றவர்கள் இணையலாம்) நாங்கள் விடமாட்டோம். உவங்களை நாறடிப்போம். நான் எங்கடை பாதிரியாருக்குச் சொல்லீட்டன் உடனடியா அறிக்கைவிடச் சொல்லி. எங்களிட்டை ஆக்கள் இருக்கினம். எங்களுக்குச் சனத்திட்டைச் செல்வாக்கிருக்கு. உருத்திரகுமார் பேச்சுவார்த்தையளுக்குப் போய் பிரபாகரனோடை படமெடுத்தவுடனும் தலைவனாகலாமோ ? (இன்னும் தலைவர் என்ற வார்த்தையை விட்டு இறங்க முடியவில்லை. அந்தளவுக்கு எங்களுக்குள் நேசிக்கப்படும் தலைவன் மீதே பாயும் இந்தப் படித்தவர்கள் நிலமை இப்பிடியிருக்கு)
இந்தா யேர்மனிலயிருந்தும் கப்பல் விடப் போறொம். அதுகும் போகாதெண்டு தெரியும். ஆனா அனுப்பப் போறோம்.

இனி நான்,
ஆரந்த முக்கியமானவை? முக்கியமெண்டா கொம்போ எனக்கவையள் ? உங்கடை குறுநிலமன்னர்களுக்குச் சொல்லி வையுங்கோ. உண்மைகள் கசக்கும் உறைப்பாச் சாப்பிடச் சொல்லி… நீங்கள் சாதாரணைமாய் உடைக்கவோ நாங்கள் காசு தந்தனாங்கள் ? நாங்கள் நம்பினோம். எங்கடை சனத்தைக் காக்குமெண்டு நம்பினோம்.

சரி உருத்திரகுமார் தகுதியில்லாத ஆள். பத்மநாதன் துரோகி. நீங்கள் தியாகியள் நடத்துங்கோவனண்ணை.

அதுக்கு எங்களுக்கு அனுமதி வரேல்ல?

அது எங்கையிருந்தண்ணை வரும்?

நாட்டிலையிருந்து வரும்.

எந்த நாட்டிலையிருந்தண்ணை வரும் ?

உது குதர்க்கம்….

அண்ணாச்சிக்கு குருதியழுத்தம் கூடீட்டுது இந்த லூசோடை கதைச்சு., தொ(ல்)லைபேசி கட். இவர்களையெல்லாம் இன்னும் தலைவர்களாக வைத்துக் காரியம் செய்யாட்டி எல்லாரும் துரோகிகள் இவர்கள் பட்டியலில்.

இத்துடன் நிற்காமல் லண்டனில் ‘தமிழீழ மக்களவை ` என்ற ஒன்றையும் உருவாக்குவதாக அறிக்கை விட்டு பற்றி மாகரன் (பெயருக்குப் பின்னால் தமிழிலும் ஆங்கிலத்திலும் கன பட்டங்களை வைச்ச நிமிரமுடியாமல் நிக்கிற மனிதனைப் பிடிச்சு ஆய்வும் செய்விச்சாச்சு) அவர்களை வைத்து அடுத்த குழப்பக் கூட்டணியை நிறுவுதற்கான பின்கதவு அலுவல்கள் அவசர அவசரமாக ஆரம்பித்து விட்டார்கள் இந்தப் படித்தவர்கள். பாவம் பற்றிமாகரன் அவர்கள் இந்த உசுப்பிகளின் உசுப்பலைக் கேட்டு “தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன். என்று பார்வையும் பார்த்திட்டார்.இதை்தான் சொல்றது போல வைக்கல்பட்டடை நாய்க்குணமெண்டு…??????

ஊரேயில்லாமல் எங்கடை சனம் அகதி முகாமில அரியண்டங்களோடை வாழுதுகளெண்ட பெயரில சாக…., இன்னும் படிச்சவை பட்டதாரி அறிவாளியெண்டு மிஞ்சினதுகளுக்குப் பாற்சோறு குடுக்காட்டிலும் பறவாயில்லை. பாடைகட்டாமல் இருக்கமாட்டியளோ ? பால்குடுக்க இயலாமல் முகாம்களில் தாய்மார் தங்கள் குழந்தைகளை யாருக்கோவெல்லாம் கொடுக்கின்ற துயரம் தெரியுமா உங்களுக்கு ? இலையானுக்குள் அம்மையும் செங்கமாரியும் தோல்வியாதிகளும் வந்து சாகும் சனத்துக்கு பத்துச்சதம் செய்ய முடியாத உங்களால் “தமிழீழ மக்களவை“ உருவாக்கி என்ன மண்ணைப் புடுங்க முடியுமமெண்டு நினைக்கிறியள்?
போதும் விடுங்கோ. மிஞ்சின சனமாவது வாழட்டும். பத்மநாதன் உருத்திரகுமார் கூட்டணியின் செயற்பாடுகள் வெல்ல ஏதாவது சேந்து செய்ய முடிஞ்சா செய்யுங்கோ. கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டு நாறவைக்காதையுங்கோ தமிழரின் வாழ்வை. ஒரு கூட்டணிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உயர்த்திவிடுங்கோ.

நீங்களெல்லாம் இதுவரையும் தமிழீழம் என்ற ஒரு தேச உருவாக்கத்துக்குத் தான் உழைச்சியளோ ? நடிச்சியளோ ? தெரியாது. உங்களால் முடியாததை யாரோ ஒருவர் செய்ய நினைக்கிறார். அதை முளையில் கிள்ளிவிடாமல் வளரவிடுங்கோ. உள்வீட்டுக் குழறுபடிகளால் ஒரு இனத்தின் வாழ்வை அழிக்காதையுங்கோ.

இதுவரைகாலம் புலிகள் மீது உலகம் தடைபோட்டதற்கான காரணங்கள் பல. ஆனாலும் புலிகள் என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு ஒரு அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க முடியாது. காரணம் 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் தியாகத்தையும் தமிழருக்கான ஓர் தேச உருவாக்கத்துக்கான பாதைகளையும் திறந்தவர்கள் விடுதலைப்புலிகள். உலகம் வெறுத்த அனைத்தையும் கைவிட்டு புலிகள் இப்போது அரசியல் வழியில் அடுத்த கட்டத்தை நகர்த்த இறுதிக்கள முனையில் இருந்து தலைமையினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பத்மநாதன் அவர்கள். விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அதன் கட்டுமானத்தை நம்பிய அனைத்து மாவீார்களுக்காகவும் அந்தப்பெயரிலேயே அடுத்த அரசியல் விடிவு தமிழினத்துக்குக் கிடைக்க வேண்டும்.

இதுவரை காலமும் இருந்தது போலன்றி இப்போது இவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘புறநிலையரசு‘ ஏதோவொரு நம்பிக்கையைத் தருகிறது. அதை எப்படியும் குழப்பியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நிற்கும் அத்தனைபேரும் சிந்தியுங்கள். இந்தப் புறநிலையரசு எந்தளவு சாத்தியம் எதைச்செய்யும் என்பதை இப்போதைக்கு எதிர்வு கூறமுடியாவிட்டாலும் இவர்களது முயற்சியில் இதுவரையும் இல்லாத ஓர் பரந்துபட்ட செயலாக்கத்துக்கான வெளிச்சம் தெரிகிறது.

துரோகியென்ற சொல் அதிகபட்சம் ஒருவருக்கான தண்டனையான சொல். ஆனால் அதனை நீங்கள் உங்களைக் கேள்விகேட்போருக்கு , உண்மையைச் சொல்வோருக்கெல்லாம் கொடுத்து ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் நடுக்கடலில் தள்ளும் நிலைக்குள் தள்ளிவிடுகிறீர்கள். இதுவரைகாலம் சரியோ தவறோ தமிழீழவிடுதலையென்ற குரலுக்குப்பின்னால் நின்ற ஊடகங்கள் முதல் உள்ளவர்கள் எல்லோரையும் துரோகியாக்குவதில் எதைக் காணப்போகிறீர்கள் ? எல்லோரையும் இந்தியாட்டை விலைபோட்டினம் இலங்கையிட்டை விலைபோட்டினமெண்டு சொல்லிச் சொல்லியே மக்களைக் குழப்பாதீர்கள். நீங்கள் துரோகியாக்கிய யாரையும் எவரும் விலைக்கில்லை இலவசமாகவும் வாங்கமாட்டார்கள். இதையேன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் ? உங்கள் யார் மீதும் எனக்குக் காழ்ப்புமில்லை கசப்புமில்லை. திரும்பத் திரும்ப நீங்களும் ஏமாந்து உங்கள் பின் நிற்பவர்களையும் ஏமாற்றுகிறீர்கள். இதைத்தான் விட்டுவிட வேண்டும் இனியாவது ஒற்றுமைப்பட்டு அவலத்தில் சாகும் 3லட்டசம் பேரும் மீட்கப்பட வேண்டுமென்பதற்காகவே திரும்பத்திரும்ப உங்களைப் பற்றி எழுதப்படுகிறது.

இறுதியாக ,
உளவாளிகள் எப்போதும் நல்லவர்கள் வடிவத்தில் தான் உலவுவார்கள். அவர்கள் உங்களைப்போல எங்களைப்போல உளறித்திரியார்கள். புரிந்து கொள்ளுங்கள். உள்ள ஒரு அமைப்பைப்பலப்படுத்துவோம். ஆளுக்கொரு அவை நாளுக்கொரு அறிக்கைவிட்டு இனியும் எங்கள் இனத்தை ஏமாற்றாது இருப்போம்.

நன்றி.. முல்லைமண்!!

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top