லண்டன் மாநகர் வீதியில் சிங்க கொடியை ஏந்திநின்றால் இலங்கையின் ராஜதந்திரியாக முடியும்

இலங்கை ராஜதந்திர சேவை எந்த நிலையில் இருக்கின்றதென்பதை உலக வாழ் இலங்கையர்களுக்கு தற்போது அறிந்துகொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
குறைந்த பட்சமாக எவ்வித சர்வதேச மொழியறிவுகூட அதற்கு தேவையற்றதாக மாறியுள்ளது. லண்டன் நகரின் வீதியில் இறங்கி, சிங்கக் கொடியைத் தூக்கி, அந்தப் படத்தை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவரச் செய்வது இதற்கு போதுமானதாகும்.
ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத்திற்கு எதிரான அமைப்பின் அனுர மெதகெதரவிற்கு இவ்வாறு ராஜந்திரியாகும் அதிஸ்டம் கிட்டியுள்ளது. ஐக்கிய இராச்சியத்திற்காக இலங்கை உயர்தானிகராலயத்தில் இவருக்கு அமைச்சு ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையர்களின் உயர்ஸ்தானிகராலயத்தின் தற்போதைய ஆலோசனை மற்றும் செய்தித் தொடர்பாளராக, பிரபல எழுத்தாளர் வோல்டர் ஜயவரத்தன செயற்பட்டு வருகிறார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு மற்றும் ஸ்ரீ.சு.க. ஐக்கிய இராச்சியத்திற்கான சபையே பிரித்தினியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை உத்தியோகப்பற்றற்ற ரீதியில், நிர்வகித்துவருகிறது.
இந்த நிலையில், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக தற்போது பதவி வகிக்கும், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் நிஹால் ஜயசிங்க, மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புக்களின் கைபொம்மையாக ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டார்.
தற்போது அவர் புரளி பேசுவதற்கும், ராஜதந்திர சேவைக்கும் வித்தியாசம் தெரியாது குழம்பிப் போயுள்ளார். தனது சாரதியிடமும், அலுவலகத்திற்கு வந்துபோகும் ஏனைய சாரதிகளிடமுமே அவர் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கிறார் என எல்லோராலும் பகிரங்கமாக பேசப்படுகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையர் அமைப்பு மற்றும் ஸ்ரீ.சு.க. ஐக்கிய இராச்சியத்திற்கான சபை இணைந்து லண்டனில் ஏற்பாடு செய்திருந்த உயர்ஸ்தானிகராலயத்தின் செயற்பாடுகள் குறித்த கூட்டத்தின் போது, சுமார் இரண்டு மணி நேரம் வழங்கப்பட்ட அறிவுரைகளை மௌனித்துக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலை தற்போதைய உயர்ஸ்தானிகருக்கு ஏற்பட்டிருந்தது.
ஸ்ரீ.சு.க. சபையின் ராணி புலத்வெல மற்றும் பயங்கரவாதத்திற்கு இலங்கையர்கள் அமைப்பின் அநுர மெதகெதர ஆகியோரே இவ்வாறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
தொழில்சார் ரீதியான ராஜந்திர சேவை எவ்வளவு கீழ்மட்டத்திற்குச் சென்றுள்ளதென்பதையும், அது அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதையே இது எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
Lanka News Web






0 விமர்சனங்கள்:
Post a Comment