சொர்ணம், தேவன் ஆகியோரது மனைவி பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளின் மூத்த தளபதிகளில் ஓருவரும் கிழக்கு மாகாண தலைவருமாகவிருந்த சொர்ணம், கிழக்கு மாகாண இராணுவத் தளபதிகளில் ஒருவரான தேவன் ஆகியோரது மனைவி பிள்ளைகள் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து சென்ற விசேட பொலிஸ்குழு இவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து வெளியேறியமை தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டுவரப்பட்டு மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கும் பொலிஸார், படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது சொர்ணம் இறந்துள்ளதாகவும், தேவன் தொடர்பாக அவரது மனைவியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இணையதள செய்தி
0 விமர்சனங்கள்:
Post a Comment