தமிழ்மொழி கணிதப் பரீட்சை வினாத்தாளின் 27 வினாக்களில் 22 பிழைகள்
கேகாலை பிரதேசத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 9ம் ஆண்டு தமிழ் மொழிமூல கணிதப் பரீட்சை வினாத்தாளின் 27 வினாக்களில் 22 வினாக்கள் பிழையாக தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த வினாத்தாளின் முதல் பகுதியில் உள்ள 20 வினாக்களில் 15 வினாக்கள் பிழையெனவும், இரண்டாவது பகுதியில் 7 வினாக்களில் 7உம் பிழையாக காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் பகுதி வினாத்தாளில் ஷடி| பிரிவு வினாவை வாசித்து விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு பிழையுள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 42 தமிழ் பாடசாலைகள் உள்ளன.
அண்மைக்காலமாக இலங்கை கல்வித்துறையில் பெரும் சீர்கேடுகள், கவனயீனமான பிழைகளும் தொடர்ந்தவண்ணமுள்ளதாக கல்விமான்கள் பலத்த கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
(பிழைகளுடன்கூடிய வினாத்தாளின் ஒருபக்கம் படத்தில் காணப்படுகிறது)






0 விமர்சனங்கள்:
Post a Comment