ஜக்ஸனின் நல்லடக்கம் செப்டெம்பர் 3 ஆம் திகதி
பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அவரது பிறந்தநாள் தினமான எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட மாட்டாது என அவரது குடும்பதரப்பு பேச்சாளரான கென் சன்ஷைன் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் பொரெஸ்ட் லோன் மயானத்தில் அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
மைக்கேல் ஜக்ஸனின் பூதவுடலானது தற்போது பொரெஸ்ட் லோன் மயானத்தில் பாதுகாப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்ட அறையில் குளிர்சாதனப் பெட்டியொன்றில் பெரும் கட்டுக்காவலுக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment