30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!
1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.
இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
- படுவான்கரையான்.
0 விமர்சனங்கள்:
Post a Comment