5 வருடங்களில் சுயமாக வழங்கப்படும் பிரஜாவுரிமை பிரிட்டனில் இனி இல்லை
பிரிட்டனில் 5 வருட காலம் எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் வசிக்கும் எவருக்கும் தன்னிச்சையாகவே குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமிக்ஞையை அந்நாடு விடுத்துள்ளது. தற்போது முன் மொழியப்பட்டுள்ள உத்தேச சட்ட விதிகளின் பிரகாரம் பிரித்தானிய குடியேற்றவாசிகள் அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு அவர்களின் திறமை, தொழில் மற்றும் தகுதியடிப்படையிலான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்புள்ளிகளைத் தன்னார்வப் பணிகள் மற்றும் சமூக சார் நடவடிக்கைகளில் பங்களிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்கள் குறிப்பாக பிரித்தானிய இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரியதும் சட்டவிரோதமானதுமான நடவடிக்கையில் ஈடுபட்டால் புள்ளிகள் கழிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் குடியேற்றவாசிகளின் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய புள்ளித்திட்டம் அண்மையில் அந்நாட்டு உள்விவகார அமைச்சர் அலன் ஜோன்சனால் முன்மொழியப்பட்டது. கடுமையான தகுதிகளுக்கான விதிகளினால் வெளிநாட்டவர்கள் பிரித்தானிய குடியுரிமையைப் பெற 10 வருடங்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.






0 விமர்சனங்கள்:
Post a Comment