யாழ் தேவி!
அன்பை அமைதியைச் சொல்லிட வே
அழகாய் ஓடுது யாழ் தேவி!
துன்ப துயரம் ஒழிந்திடவே
துணையாய் போகுது யாழ் தேவி
பிரிந்தவர் தம்மை சேர்த்திடவும்
இறந்தவர் தன்னை நினைத்திடவும்
உறவுகள் ஒன்றாய் வாழ்ந்திடவும்
உதவிடும் இந்த யாழ் தேவி
கொடிய யுத்தம் நீங்கியதை
கொடுமை யாவும் ஓடியதை
வசந்தம் வாழ்வில் வீசுவதை
வடிவாய்ச் சொல்லும் யாழ் தேவி
வளங்கள் யாவும் அழிந்த தனால்
வறுமை யுற்று வாடுவதால்,
வடக்கில் செழிப்பை காண்பதற்கு....
வழிகள் காட்டும் யாழ் தேவி...
போரில் பட்ட காயங்களும்
புழுதி மூடிய களனிகளும்
குண்டுகள் இடித்த வீடுகளும்....
காணச் செய்யும் யாழ் தேவி
பாலை வனமாய் சோலைகளும்
பசுமை இழந்து போனதனால்
நாளை மலரும் புதுவாழ்வை
நமக்குத் தருமோ யாழ் தேவி
கறுவாக்கேணி
முத்து மாதவன்






0 விமர்சனங்கள்:
Post a Comment