இறந்ததற்கு பிறகும் ரூ. 500 கோடி சம்பாதித்த மைக்கல் ஜக்சன்
மைக்கல் ஜக்சனின் சொத்துக்காக அவரது குடும்பத்தினர் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் இறந்துவிட்ட நிலையிலும் கூட கோடி கோடியாய் சம்பாதித்து கொட்டி கொண்டிருக்கிறார்.
மைக்கல் ஜக்சன் பாடல் அல்பம் பட அல்பம் போன்றவற்றை விற்பதற்கு சில நிறுவனங்கள் அனுமதி பெற்று இருந்தன. இவற்றில் எவ்வளவு விறக்கப்படுகின்றனவோ அதில் குறிப்பிட்ட பகுதி மைக்கேல் ஜக்சனுக்கு வழங்க வேண்டும். இது தவிர வேறு வகையில் வருமானம் கிடைக்க பல வியாபார ஒப்பந்தங்களும் செய்து இருந்தார்.
மைக்கல் ஜக்சன் மரணத்தால் அவரது செல்வாக்கு திடீரென அதிகரித்து அவருடைய அல்பங்கள் அதிக அளவில் விற்கின்றன. வியாபார ஒப்பந்த பணமும் வந்து கொண்டிருக்கிறது.
மைக்கல் ஜக்சன் இறந்து 48 நாட்கள் ஆகிறது. அதற்குள் ரூ. 500 கோடி வரை வருமானம் வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் ரூ. 500 கோடி வருமானம் வரும் என்று கணக்கிட்டு உள்ளனர்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ, மைக்கேல் ஜக்சனுக்கு நிச்சயம் பொருந்தும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment