விடுதலைப்புலிகளின் விமான தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சியை பெற்ற நிபுணர் கைது
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த விமான தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சியை பெற்ற நிபுணர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர் வவுனியா இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆலோசனையின் பேரில் இவர், வெளிநாடு ஒன்றில், ராடார் மற்றும் தகவல் பரிமாற்றம் பற்றிய இரண்டு வருட பயிற்சியினை முடித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய ஒடுத்தளங்களில் இருந்து புறப்படும் தாக்குதல் ஜெட் விமானங்கள் பற்றிய தகவல்களையும் தான் பெற்றிருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ளவர் கூறியதாகவும் இந்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த கருவிகளை முல்லைத்தீவு பிரதேசத்தில் கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment