முகாமிலிருந்து இராணுவ வாகனத்தில் பாதுகாப்பாக படகுவரை அழைத்துச்செல்ல 5 லட்சம் ரூபா!
வுவனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை இராணுவத்தினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவருவதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவின் இரகசியத் தகவலொன்று எமது இணையத்தளத்திற்கு கிடைத்துள்ளது.
முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரை விடுவிப்பதற்கு இரண்டரை லட்ச ரூபா வழங்கப்படுவதாகவும், விடுவிக்கப்பட்ட நபர் இராணுவ வாகனத்திலேயே பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு இந்தியா செல்வதற்காக படகில் ஏற்றப்படுவதற்கு 5 லட்ச ரூபா வழங்கப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவின் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
இவ்வாறு முகாமிலுள்ளவர்கள் விடுவிப்பதற்கான முகவர்களாக செயற்படுவர்கள் வவுனியா, தேக்கதோட்டம் பிரதேசத்தில் உள்ளவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இராணுவத்தின் சிலரையும், அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவின் சிலரையும் பயன்படுத்தி, முகாமிலுள்ளவர்களின் உறவினர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, குறித்த நபரை விடுப்பதற்கு அதிகாரிகளுக்கும் உறவினர்களுக்கு முகவராக இவர்களே செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முகாமிலிருந்து லஞ்சம் கொடுத்து வெளியேறி, இந்தியா மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும், இந்த முகவராக செயற்படும் நபர் "ஐ.டி.பி. ஈழத்தின் அன்வர்" என்றே புனைப் பெயரில் அழைக்கப்படுவதாகவும் அந்தப் புலனாய்வுத் தகவல் மேலும் தெரிவித்தது.
இதனைத் தவிர, அரசாங்கத்துடன் இணைந்துசெயற்படும் துணை ஆயுதக்குழுக்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, முகாமிலிருந்து நபர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. ஒரு நபரை விடுவிப்பதற்கு ஒரு லட்சம் ரூபா முதல் அறவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
உறவினர்கள் கோரும் பட்சத்தில் அவர்கள் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் வரை முகவர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களே, கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு, குறித்த நபர்களை கொழும்பிற்கு அழைத்துவந்த பின்னர், காவல்துறையினருக்கு தகவல் வழங்கி அவர்களை மீண்டும் கைதுசெய்ய இந்த முகவர்களே வழிசெய்வதாகவும் தெரியவருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment