விடுதலைப் புலிகளின் விஸ்வநாதன் உருத்திரகுமார் மற்றும் தவா இளயதம்பியை சிக்க வைக்கும் முயற்சிகள்!
விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வழங்கியுள்ள தகவல்களின்படி விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள பிரதான தலைவர்களான விஸ்வநாதன் உருத்திரகுமார் மற்றும் இளயதம்பி ஆகியோரை சிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
'எஞ்சியவர்களையும் விரைவில் சிக்க வைக்க முடியும் என்பது உறுதி. இவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் அமைப்பு சார்வதேச ரீதியில் வீழ்ச்சியடையும். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பான அறிவைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவொன்று கே.பி.யை கைதுசெய்வதற்காக பல நாட்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அவர் கடநத்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன் புலனாய்வு குழுவினரின் முயற்சி வெற்றியளித்துள்ளது. விடுதலைப்புலிகளின் ஆயுத வர்த்தகம் தொடர்பாகவும், அந்த அமைப்புடன் சம்பந்தப்பட்;டுள்ள சில வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் குறித்தும் கே.பி தகவல்களை வெளியிட்டுள்ளார்." என கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இந்த நிலையில் கே.பி. வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகளின் சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமார் அமெரிக்காவில் இருப்பதுடன் மற்றுமொரு தலைவரான தவா இளையதம்பி கனடாவில் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், இவர்கள் இருவரும் பத்மநாதனுடன் தொடர்புகளை கொண்டிருந்தாகவும் தற்போது அந்த சகல தகவல்களையும் கே.பி. வெளியிட்டுள்ளதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
பத்மநாதன் தற்போது, புலனாய்வு பிரிவினரின் ரகசிய இடமொன்றில் வைத்து விசாரிக்கப்படுவதுடன் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment