கொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை
அமெரிக்காவின் சிக்காக்கோ நகர்ப்புற நீதிமன்றமொன்றில் கொட்டாவி விட்ட ஒருவருக்கு அந்த நீதிமன்றம் 6 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. கிளிவ்டன் வில்லியம்ஸ் (வயது 33) என்பவரே நீதிமன்றத்தில் சத்தத்துடன் கொட்டாவி விட்டமைக்காக நீதிபதி டானியல் ரொசாக்கால் 6 மாதச் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
வில்லியம்ஸின் உறவினரொருவர் தொடர்பான போதைப்பொருள் குற்றச்சாட்டு விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கொட்டாவி விட்டதை நீதிபதி அவதானித்ததையடுத்தே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக வில்லியம்ஸ் மன்னிப்புக் கோரியதை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் 21 நாட்கள் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அந்நகர அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர், இவர் திட்டமிட்டே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாகக் கொட்டாவி விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதை மறுத்துள்ள வில்லியம்ஸின் உறவினர் தான் சிறைத்தண்டனை பெற்றுள்ளதை நம்பமுடியவில்லையென வில்லியம்ஸ் தனது குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment