உலகின் முதலாவது முற்று முழுதாக கண்ணாடி பதிக்கப்பட்ட அம்மன் கோவில்
உலகின் முதலாவது முற்று முழுதாக கண்ணாடி பதிக்கப்பட்ட அம்மன் கோவில் மலேசியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 11.76 கோடி ரூபா செலவில் ஜோஹர் பாஹ்ரு எனும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் காளி கோவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
தலைநகர் கோலாலம்பூரில் கண்ணைக் கவரும் விதத்தில் புத்தமதக் கோவில் ஒன்றின் முகப்பில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது தனது கவனத்தை ஈர்த்ததாகவும் அதனையடுத்தே ஜோஹரிலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவிலை உலகின் முதலாவது கண்ணாடிக் கோவிலாக மாற்றும் திட்டம் தன் மனதில் உதித்ததாகவும் மேற்படி கோவிலின் தலைவர் சின்னத்தம்பி கூறினார்.
இந்தக்கோவிலின் நிர்மாணப் பணிகளுக்கு மலேசிய இந்துக்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை, பழுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான கண்ணாடித்துண்டுகள், கோவிலின் கோபுரம் முதல் தரை, சுவர்கள் எங்கும் பதிக்கப்பட்டுள்ளன.
மியன்மாரைச் சேர்ந்த 9 கண்ணாடி நிர்மாணக் கலை நிபுணர்கள் மேற்படி கோவிலை வடிவமைத்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment