கே.பியின் கைதும் அரசியல் தீர்வும்
புலிகள் இயக்கத்தின் தற்போதைய தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திய கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இலங்கைக்குக் கொண் டுவரப்பட்டிருக்கின்றார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையில் இக்கைது முக்கிய இடத் தைப் பெறுகின்றது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட புலிகள் இயக்கத்தின் உள்ளூர் முக்கியஸ்தர்கள் எல்லோரும் இராணுவ நடவடிக்கையின் போது கொலையுண்டதைத் தொடர்ந்து இலங்கையில் புலிகள் இயக்கம் முற்றுமுழு தாக அழிவுற்ற நிலையில், வெளிநாடுகளில் அவ்வியக்கத்துக்கு உயிரூட்ட முயற்சித்தவர் குமரன் பத்மநாதன்.
இவரது கைது வெளிநாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் புலிகள் இயக்கம் பற்றிய நம்பிக்கையைத் தோற்றுவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆப்பு வைப்பதாக அமையும்.
புலிகள் இயக்கம் என்பது இப்போது முடிந்துபோன கதை. எனினும், அது அழிந்துவிடவில்லை என்ற மாயையைத் தோற் றுவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண் பதற்கான முயற்சிக்குக் குந்தகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கலாம்.
அரசியல் தீர்வு முயற்சி பின்னடைவு கண்டதற்குப் புலிகள் பிரதான காரணம். உணர்ச்சியூட் டும் வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சம கால யதார்த்தத்துக்கு முரணான நம்பிக்கை யைப் புலிகள் மக்களிடம் தோற்றுவித்தார்கள்.
திட்டமிட்டு அந்த நம்பிக்கையை வளர்த்த பின் ஆயுத பலத்தின் மூலம் மக்களை தங்கள் வழிக்குத் திசைதிருப்பினார்கள்.
இந்த அழிவுகரமான செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளுக்குப் பக்கத்துணையாகச் செயற்பட்டார்கள் என் பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
மீண்டுமொரு முறை புலிகள் பற்றிய மாயை தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் தீர்வுக்குக் குந்தகமான சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதாலேயே குமரன் பத்மநாத னின் கைது முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்தக் கைது இன்னும் புலிகள் பற்றிய மாயைக்குள் சிக்கியிருப்பவர்கள் அதிலிரு ந்து விடுபட்டு யதார்த்தபூர்வமாகச் சிந்திப்பதற்கு வழிவகுக்கும்.
இந்தச் சிந்தனையை வளர்க்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளைச் சார்ந்தது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களைச் சார்ந்தது.
கூட்டமைப்புத் தலைவர்கள் ஐந்து வருட காலமாகப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுத் தனிநாட்டு இலக்குடன் செயற்பட் டவர்கள்.
இந்தத் தனிநாட்டுப் பயணம் தமிழ் மக்களின் உயிரிழப்புகளுக்கும் சொல் லொணாத் துயரங்களுக்கும் வழிவகுத்தது என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இந்த அழிவுப் பாதையில் தமிழ் மக்களைப் பலவந்தமாக இட்டுச் சென்றவர்களில் புலிகள் அரங்கிலிருந்து மறைந்துவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் களே.
இவர்களே சகல அழிவுகளுக்கும் இழப்புகளுக்குமான பொறுப்பை இப் போது ஏற்க வேண்டியவர்களாக உள்ள னர். கடந்த காலத் தவறுகளுக்குப் பிராயச் சித்தமாக, மக்களைச் சரியான தடத்தில் இவர்கள் வழிநடத்த வேண்டும். அதற்கு இவர்களிடமும் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம்.
வலுவான சுயாட்சி அமைப்பொன்றைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான செயற்பாடு காரணமாகக் கைநழுவிப் போய்விட்டது.
அவ்வாறான தீர்வுக்கான முயற்சி உடனடி யாகப் பலனளிப்பதற்கான சூழ்நிலை இன்று இல்லை. இன்றைய யதார்த்தத்துக் குப் பொருத்தமான தீர்வை ஏற்றுக்கொண்டு வலுவான சுயாட்சி அமைப்பைப் பெறுவ தற்குப் படிப்படியான முயற்சியை மேற் கொள்வதே ஆக்கபூர்வமான அணுகு முறை.
விட்டால் குடுமி அல்லது வழித் தால் மொட்டை என்ற அணுகுமுறையை பின்பற்றியதால் ஏற்பட்ட பேரழிவு தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.
தினகரன்






0 விமர்சனங்கள்:
Post a Comment