உருத்திரகுமாரின் தகவலின் அடிப்படையிலையிலேயே கே.பி. கைது நாடகம்!
புலிகளின் புதிய தலைவராக பொறுப்பேற்ற கே.பி என்று அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் மலேசிய இலங்கை புலனாய்வு பிரிவினரால் தீடிர் முற்றுகையில் கைது செய்யப்பட்டு உடனடியாக கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். புலிகளின் நிழல் அரசின் செயற்குழு பொறுப்பில் இருந்த சட்டத்தரணி உருத்திரகுமார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கே.பி.யின் கைது நாடகம் அரங்கேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரபாகரனின் மறைவையடுத்து நாடுகடந்த தமிழீழ நிழல் அரசை அமைக்கும் முயற்சியில் புலிகளுக்கிடையே இழுபறிகள் நிலவி வந்தன. இவ் இழுபறி கே.பி.க்கும் உருத்திரகுமாருக்கும் இடையே முற்றிய நிலையில் கே.பி.யின் இருப்பிடம்பற்றிய தகவலை இலங்கை புலனாய்வுதுறைக்கு சட்டத்தரணி உருத்திரகுமாரே வழங்கியதாகவும்; செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு ஜனநாயக வழியில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று கே.பி. விரும்பியதாகவும் எனினும் நிழல் அரசின் தலைமை பொறுப்பின் தலைவராக தானே இருக்க வேண்டும் என்று உருத்திரகுமார் விரும்பியதாகவும் அதன் இழுபறி காரணமாக காட்டிக்கொடுப்பு இடம்பெற்றதாகவும் அறியவருகின்றது.
பாலசிங்கம் இறந்தபொழுதும் அந்த இடத்திற்கு தன்னை நியமிக்கும்படி உருத்திரகுமார் எதிர்பார்த்து அதற்குரிய முஸ்தீபு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் பிரபாகரன் அவர் மீது நம்பிக்கையின்றி நிராகரித்திருந்தார். பின்னர் பிரபாகரன் கொல்லப்பட்ட நிலையில், புலிகளின் பொறுப்பு அனைத்தும் சர்ச்சைக்கு மத்தியில் கே.பி.யின் கைகழுக்கு சென்றது.
கே.பி. ஏற்கனவே சர்வதேச பொலிஸாரரினால் (இன்ரப்போல்) தேடப்பட்டு வருகையில் அவரது போக்குவரத்து சுதந்திரங்கள் முற்றாக தடுக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் உருத்திரகுமாரை நாடவேண்டிய நிற்பந்தத்திற்கு சர்வதேச புலிகள் தள்ளப்பட்டனர். இறுதியில் கே.பி.க்கும் உருத்திரகுமாருக்கும் இடையே ஏற்பட்ட உள்மோதல் காரணமாக கே.பி.யை சந்திக்க சென்ற நடேசனின் சகோதரர் குடும்பத்தின் சந்திப்பு ஒழுங்குகளை செய்த உருத்திரகுமாரின் தகவலின் அடிப்படையில் தீடிர் என்று கே.பி.யை முற்றுகையிட்ட மலேசிய இலங்கை கூட்டு புலனாய்வு அதிரடிப்பிரிவினர் எதிர்பாரத முறையில் கே.பி.யை புதன்கிழமையே கைது செய்துவிட்டனர் என்றும் தெரியவருகின்றது.
உருத்திரகுமார் குறுக்கு வழியில் புலிகளின் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்ற சூழ்ச்சியில் இருந்து விலகி தற்போது தொலைபேசிகளை தவிர்த்து வருவதோடு புலிகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தனது நெருங்கிய புலிகள் வட்டத்திற்கு தெரிவித்து வருவதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.neruppu.com/?p=10812






0 விமர்சனங்கள்:
Post a Comment