இந்திய ஜோதிடர்களிடம் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஏமாறும் தமிழர்கள்
இந்தியாவிலிருந்து வந்த சோதிடர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாகக்கூறி கொழும்பு காவத்தை பகுதி மக்களிடமிருந்து சுமார் 25 பவுண் தங்க நகைகள் உட்பட பெருந்தொகையான பணத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் தலைமறைவாகியுள்ள இவர் காவத்தை கெட்டேதென்ன பகுதியில் தங்கியிருந்து ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். ஸ்ரீ மலையாள பகவதி ஜோதிடம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு பொது மக்களுக்கு உதவியாளர்களின் மூலம் இவர் பிரசாரம் செய்துள்ளார்.
லக்ஷ்மி வசீகரம், திருமண யோகம், வாகன பொருத்தம், வாஸ்து சாஸ்திரம், குழந்தை பாக்கியம், வதுவிடம், கணவன் மனைவி ஒற்றுமை போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதாகவும் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.
மக்களை வசியப்படுத்திய இவரிடம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் பெரும் தொகையான பணத்தை செலவிட்டுள்ளதோடு பூஜைக்காக தங்க நகைகளையும் கொடுத்துள்ளனர்.
பொது மக்களால் வழங்கப்பட்ட தங்க நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஜோதிடர் தலைமறைவாகியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இவ்வாறான ஜோதிடர்களின் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த ஜோதிடர்களிடம் ஏமாந்து பல தமிழ் மக்கள் பெருமளவு பணத்தையும், நகைகளையும் இழந்துள்ளனர். அத்துடன், இவர்களது கருத்துக்களைக் கேட்டு குடும்பங்கள் பல பிரிந்தும், சிதைவடைந்தும் போயிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சங்கதி






0 விமர்சனங்கள்:
Post a Comment