பன்றிக் காய்ச்சலால் சவூதியில் இலங்கையர் ஒருவர் மரணம்
பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார்.
32 வயதான இலங்கையர் ஒருவரும், 15 வயதான சவூதி சிறுவன் ஒருவனும் பன்றிக் காய்ச்சல் நோயினால் அண்மையில் உயிரிழந்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் பன்றிக் காய்ச்சல் நோயினால் இதுவரையில் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உம்றா யாத்திரைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment