இலங்கையின் தற்காப்புக்காக ஆயுதங்களை வழங்கினோமே தவிர, புலிகளை அழிக்க அல்ல என்கிறார் இந்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்
இலங்கையின் தற்காப்புக்காக ஆயுதங்களை வழங்கினோமே தவிர, விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அல்ல என்று இந்திய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (24) திங்கட்கிழமை நடைபெற்ற, அதி நவீன "பீஷ்மா' ரக பீரங்கிகளை இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது:-
"பீஷ்மா ரக பீரங்கிகளை உருவாக்கியுள்ளது உள்நாட்டுத் தொழில்நுட்பத்துக்கு ஒரு மைல் கல்லாகும். இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் இன்னும் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும். அதிநவீன பீரங்கிகள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கவில்லை. இலங்கை தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே ஆயுதங்களை வழங்கினோம். ஏற்கெனவே போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றார் அமைச்சர் பல்லம் ராஜு.
0 விமர்சனங்கள்:
Post a Comment