அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனின் உதவியாளரை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்தவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனின் உதவியாளர் எனக் கூறப்படும் பெண் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்த சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா தடுப்புமுகாமில் தங்கியிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரின் பெண் உதவியாளரை வெளிநாட்டுக்கு அனுப்ப முற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டார்.
இன்றைய தினம் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
0 விமர்சனங்கள்:
Post a Comment