தென் கொரியாவில் கள்ள நோட்டு அச்சிட்ட இலங்கையர் கைது
தென் கொரியாவில் கள்ள நோட்டு அச்சிட்ட இலங்கையர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.28 வயதான இலங்கையர் ஒருவர் தென் கொரிய நாணயமான வோன்; நோட்டுக்களை சட்டவிரோதமான முறையில் அச்சிட்டுள்ளார் என காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கள்ள நோட்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் காகிதாதிகள் என்பனவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
2006ம் ஆண்டு தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் மூலம் குறித்த இலங்கையர் தென் கொரியாவிற்கு சென்றதாகவும், எதிர்வரும் 28ம் திகதி ஒப்பந்த காலம் நிறைடைந்து இலங்கைக்கு திரும்ப இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இலங்கையர் தற்போது தென் கொரிய சிறைச்சாலையொன்றில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தூதரக வட்டா செய்திகள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment