கே.பி கடத்தப்படவில்லை! கைது செய்யப்பட்டார்.
கே.பி என்றழைக்கப்படும் பிரபல கேடி குமரன் பத்மநாதன் மலேசியாவில்
வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார்..
கே.பி கைது செய்யப்பட்டமை இலங்கைப் புலனாய்வுத்துறைக்குக் கிடைத்
த மாபெரும் வெற்றி. ஆனால் புலிகளின் ஊடகங்கள் கே.பி
மலேசியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். கே.பி
ஒரு அப்பாவி. அவரை இலங்கை அரசு கடத்திவிட்டது என்று பலிகளின்
ஊடகங்கள் சித்தரிக்க முயலுகின்றன. கே.பி கைது ஒரு அரச பயங்
கரவாதம் என்று புலிகளின் இணையத்தளமான தமிழ்நெற் கூறுகிறது.
அவரை கடத்திச் சென்றது சர்வதேச விதிகளை மீறிய செயலாம். கசாப்புக்
கடைக்காரன் காருண்யம் பேசுவதும் தமிழ் நெற் சர்வதேச விதிகளைப்
பற்றிக் கூறுவதும் ஒன்று. விஜிதரன் முதற்கொண்டு இன்றுவரை புலிகளால்
கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் எத்தனை பேர். சமீபத்தில்
கடத்தப்பட்ட புளொட் உறுப்பினர் பாரூக், ஈ.என்.டி.எல.;.எவ் உறுப்பினர்
மனோமாஸ்ரர் எங்கே? கொழும்பில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட தமிழ்
ப் பொலிஸ் அதிகாரி எங்கே? புலிகளால் கடத்திச் செல்லப்பட்வர்கள் பற்றி
பட்டியல் போட பக்கங்கள் போதாது. இப்படி இருக்கையில் புலிகளின்
ஊடகங்கள் மனித உரிமை மீறல்கள் பற்றியும், சர்வதேச விதிகள் பற்றியும்
கூறுவது வேடிக்கையானது.
கே.பி வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டாரா?
மலேசியா இறைமையுள்ள ஒரு பெரிய நாடு? கடுமையான சட்டதிட்டங்கள்
அமுல் படுத்தப்படும் கட்டுக்கோப்பான நாடு. போதைவஸ்து வைத்திருந்
தால் மரணதண்டனை வழங்கப்படுகின்ற நாடு. அழகான நாடும் கூட!
அப்படிப்பட்ட ஒரு நாட்டில் சர்வதேசப் பொலிஸாரால் தேடப்படும் ஒரு பயங்
கரவாதியை அந்த நாட்டின் புலனாய்வுத் துறையின் உதவியுடன் கைது
செய்து இலங்கைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்ததை கடத்தல்
என்று கூறிவிட முடியுமா? கே.பி எப்படிக் கைது செய்யப்பட்டார் என்கின்ற
ஆராய்ச்சி அவசியமற்றது.
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாலோ, பிரபாகரன் கொல்லப்பட்டதாலே
கலக்கமடையாத புலிப் பினாமிகள் கே.பி யின் கைதினால் கலக்கமடைந்
துள்ளனர். பல மர்மங்கள் வெளிவரப்போகின்றது.
இலங்கையில் மட்டுமல்ல கடல் கடந்த நாட்டிலும் மனித சதைத் துண்டங்
கள் சிதறக் காரணமானவர் கே.பி எப்போதோ கைது செய்யப்பட்டிருந்தால்
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்
கமுடியும்;. இலங்கையில் சமாதானச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்
டிருந்த வேளையில் கே.பி கப்பல் கப்பலாக ஆயுதங்களை அனுப்பிக்
கொண்டிருந்தார். தாய்லாந்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்
கொண்டிருந்த வேளையில் பிரபாகரன் தனக்குத் தேவையான ஆயுதங்களின்
பட்டியலை கருணா மூலமாக் கே.பி யிடம் அனுப்பியிருந்தார். மக்களை
மிரட்டிப் பெற்ற கப்பம், வரி மற்றும் போதை வஸ்து கடத்தலிலும் கிடைத்
த பணத்தில் கே.பி வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்
தார். வன்னியில் பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் உல்லாச வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருந்தார்.
மக்கள் உறவுகளை இழந்தும், சொத்துக்
களை இழந்தும் வேதனைகளுடன் அவல
வாழ்க்கை வாழந்து கொண்டிருந்தபோது
பிரபாகரனால் எதுவித கவலையுமின்றி
தனது மகனுடன் நீச்சல் தடாகத்தில்
வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட காற்றடித்
த மிதவையுடன் உல்லாசக் குளியல்
குளிக்க முடிந்தது. மக்கள் மிக அவலங்
களுடன் வாழ்கிறார்கள், புலிகளின்
காவலரண்களில் சிறுவர்கள்
பிரபாகரனைக் காப்பதற்கு பட்டிணியாய்
காவல் கிடக்கிறார்கள். சமாதான காலத்
தில் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்
படுத்தி மக்களுக்கு அமைதியான வாழ்க்
கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு
பிரபாகரனால் உல்லாசக் குளியல் குளிக்
க முடியவில்லை. பிரபாகரனுக்கு கிடைத்
த ஆடம்பரப் பொருட்கள்
வெளிநாடுகளிலிருந்தே
பெற்றுக்கொள்ளப்பட்டன.
கே.பி கைது செய்யப்பட்டபோது கே.பி யைச் சந்திப்பதற்காக நடேசனின்,
மகனும் சகோதரரும் இங்கிலாந்திலிருந்து சென்று ஆடம்பர ஹொட்டல்
ஒன்றில் கே.பியிற்கு மரக்கறி உணவும், சந்திக்கச் சென்றவர்களுக்கு நண்
டு, பெரிய இறால், மற்றும் கடலுணவு வகைகளுடன் உணவருந்தியிருக்கிறார்
கள்.. இதேவேளையில் வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில்
தமிழ் மக்கள் இராணுவம் கொடுக்கும் கவளம் சோற்றை உண்கிறார்கள்.
நடேசன் தனது புத்திரனை வெளிநாட்டிற்கு அனுப்பி சிறந்த சிறந்த எதிர்
காலத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு;த்தான் தனது உயிரையும் காப்பாற்
ற இராணுவத்திடம் சரணடைய முற்பட்டிருக்கிறார். இத்தருணத்தில் வன்
னியில் பலாத்காரமாகக் கட்த்தப்பட்டு இராணுவப் பயிற்சியழிக்கப்பட்டு
கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரை நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது. ஏற்
கனவே தனது பிள்ளைகளையும் மதிவதனியை வெளிநாட்டில் வசிக்க விட்
டிருந்த பிரபாகரன் இம்முறை அவர் எதிர்பார்தபடி மகிந்த ராஜபக்ஷவை
எமாற்ற முடியவில்லை. அதனால் முள்ளிவாய்க்காலில் சேற்றுக்குள் சங்கமிக்
கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. கே.பியின் வங்கிக் கணக்குகளில் இருக்
கின்ற கோடிக்கணக்கான பணமும் பேரழிவுகளுக்காகச் செலவிடப்பட்ட
கோடிக்கணக்கான பணமும் சமாதான ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி குறைந்
த பட்சத் தீர்வைப் பெற்றுக் கொண்டு தமிழர்களுடைய பிரதேசங்களில் நல்
ல அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு
பேரவலம் ஏற்பட்டிருக்காது. ஆனால் மாறாக தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்
காக மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து மக்களின் பேரழிவில் தங்கள் ஆடம்
பர வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். புலிகளின் தலைமைகளுக்கு
சமாதானம் விருப்பமில்லை என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறலாம்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பா சென்றபோது பேச்சுவார்த்தை வெற்
றியழிக்குமா? என்று பாலசிங்கத்திடம் கேட்டபோது நீ இப்படிக் கேட்கிறாய்
பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கச் சொல்லி தலைவர் சொல்லியிருக்கிறார்
என்று பாலசிங்கம் தன்னிடம் சொன்னதாகவும், தனக்கு அதிர்ச்சியாக இருந்
ததாகவும் கருணா பத்திரிகையாளர்களுக்கு கூறியிருந்தார். சமாதான ஒப்பந்
தம் வெறும் நாடகம்தான். இதை வைத்துக் கொண்டு இலங்கை அரசின்
மேல் நாங்கள் சவாரி செய்கிறோம், இதைத்தான் இந்தியா மீதும் நாங்கள்
செய்தோம் என்று பொட்டு அம்மான் தங்களிடம் கூறியதாக கொழும்பில்
கைது செய்யப்பட்ட கரும்புலிகள் தங்கள் வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார்
கள். சமாதான காலத்தில் தென்னிலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை
எப்படிப் பலப்படுத்திக் கொண்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த
விடயம். தொடர்ந்தும் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தால்தான் தாங்கள்
பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கமுடியம் என்பது புலித்
தலைமைகளின் திட்டம் என்பது ஏனைய தளபதிகளுக்கும் உறுப்பினர்
களுக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. பிரபாகரனின் அழிவிற்குப்
பிறகு பேராசை கொண்ட கே.பி தன்னுடைய கையைப் பலப்படுத்த நினைத்
தார். தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல தொலைபேசியூடாக
ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுத்த கே.பி அண்மையில் சனல் 4
தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி இவர் விரைவில் கைது செய்யப்
படுவார் என்பதற்கு முன்னறிவிப்பாக இருந்தது. சனல் 4 தொலைக்காட்சிக்
கும் புலிப் பினாமிகளுக்கும் உள்ள தொடர்பையும் அது உறுதிப்படுத்
தியது. சனல் 4 தொலைக்காட்சி புலிப்பினாமிகளிடம் பணம் பெற்றுக்கொண்
டு வவுனியாவிலிருந்து ஒரு பொய்யான விவரணச் செய்தியை வெளியிட்டு
அது சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டது ஏற்கனவே
தெரிந்த விடயம். கே.பி யின் கைது அரசாங்கத்தைவிட தமிழ் மக்களுக்கு
பாரிய நன்மையை ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும்.
- ஊர்க்குருவி
மின் அஞ்சலில் கிடைக்கப்பெற்றது
0 விமர்சனங்கள்:
Post a Comment